The Union Minister of Coal, Mines and Parliamentary Affairs, Shri Pralhad Joshi, held discussions with a high-level delegation led by former Prime Minister and Special Trade Envoy of Australia Mr. Tony Abbott here yesterday. The delegation had called on the Minister to discuss about expanding trade and economic relationship between India and Australia especially regarding broader developments in the energy sector, including the use of Australian resources to support India’s energy needs and ambitious policy agenda. Mr Abbott was accompanied by Mr Barry O’Farrell AO, Australian High Commissioner and Mr Hugh Boylan, Economic Counsellor, Australian High Commission.
Informing the delegation about the opening of the coal sector under the present regime, the Minister highlighted the importance of coal as a major source of energy in India and the focus of the Government is giving the right fillip to further augment coal production in India. The Minister also requested the Australian delegation for collaborating with India regarding sharing of technology in areas such as surface and underground coal gasification and extraction of Coal Bed Methane (CBM) etc.
Importance of Australia as source of Critical and strategic minerals for EV manufacturing in India was also highlighted by Hon’ble Minister.
The Secretary, Ministry of Coal, Dr. Anil Kumar Jain, Secretary, Ministry of Mines, Shri Alok Tandon and other senior officers of both the Ministries participated in the discussion.
xxxxxxx
ஆஸ்திரேலிய முன்னாள் பிரதமரும் மற்றும் சிறப்பு வர்த்தக தூதருமான டோனி அபோட் தலைமையிலான உயர்நிலைக் குழுவுடன், மத்திய நிலக்கரி, சுரங்கத்துறை மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, புதுதில்லியில் நேற்று ஆலோசனை நடத்தினார்.
இந்தியாவின் எரிசக்தி தேவைகள் மற்றும் லட்சிய கொள்கை திட்டங்களுக்கு உதவ ஆஸ்திரேலிய வளங்களை பயன்படுத்துவது உட்பட எரிசக்தி துறையில் விரிவான முன்னேற்றங்கள் குறித்து இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே வர்த்தக மற்றும் பொருளாதார உறவுகளை விரிவுபடுத்துவது பற்றி ஆலோசிக்க ஆஸ்திரேலிய குழுவினர் மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷியை சந்தித்தனர். டோனி அபாட்டுடன், இந்தியாவுக்கான ஆஸ்திரேலிய தூதர் பேரி ஓஃபரல், ஆஸ்திரேலிய தூதரகத்தின் பொருளாதார ஆலோசகர் ஹக் பாய்லன் ஆகியோர் உடன் இருந்தனர்.
தற்போதைய அரசின் கீழ், நிலக்கிரித்துறையை திறந்து விடுவது பற்றி ஆஸ்திரேலிய குழுவினரிடம் தெரிவித்த மத்திய அமைச்சர், இந்தியாவில் எரிசக்தியின் முக்கிய ஆதாரமாக நிலக்கரி இருப்பதன் முக்கியத்துவத்தையும், இந்தியாவில் நிலக்கரி உற்பத்தியை மேலும் அதிகரிக்க சரியான ஊக்கம் அளிப்பதில் மத்திய அரசு கவனம் செலுத்துவதையும் எடுத்துக் கூறினார்.
மேற்பரப்பில் நிலக்கரி எடுப்பது, நிலக்கரி படுகையில் மீத்தேன் எடுப்பது போன்ற தொழில்நுட்பங்களை, பகிர்வதில் இந்தியாவுடன் கூட்டாக செயல்பட வேண்டும் என ஆஸ்திரேலிய குழுவிடம் மத்திய அமைச்சர் வேண்டுகோள் விடுத்தார்.
இந்தியாவின் மின்சார வாகனங்களின் உற்பத்திக்கான முக்கியமான கனிமங்களுக்கு, ஆஸ்திரேலியா ஆதாரமாக இருப்பது பற்றியும் மத்திய அமைச்சர் எடுத்துரைத்தார்.
நிலக்கரித்துறை செயலாளர் டாக்டர் அனில் குமார் ஜெயின், சுரங்கத்துறை செயலாளர் அலோக் டாண்டன் மற்றும் இரு அமைச்சகங்களின் மூத்த அதிகாரிகளும் இந்த ஆலோசனையில் பங்கேற்றனர்.
–திவாஹர்.