The Prime Minister, Shri Narendra Modi has said that Handlooms manifest India’s diversity and the dexterity of countless weavers and artisans and has called for support for the local handloom products.
In a tweet, the Prime Minister said :
“Handlooms manifest India’s diversity and the dexterity of countless weavers and artisans. National Handloom Day is an occasion to reiterate support to our weavers by enhancing the spirit of #MyHandloomMyPride. Let us support local handloom products!”
Quoting a tweet from the Olympics medalist Saikhom Mirabai Chanu, Prime Minister tweeted :
“The last few years have seen a renewed interest in handlooms. Glad to see @mirabai_chanu support the spirit of #MyHandloomMyPride. I am confident the handloom sector will keep contributing to the building of an Aatmanirbhar Bharat.”
xxxxxxxx
இந்தியாவின் எண்ணற்ற நெசவாளர்கள் மற்றும் கலைஞர்களின் பன்முகத்தன்மை மற்றும் கைவினைத் திறனை கைத்தறிகள் வெளிப்படுத்துவதாகக் கூறி பிரதமர் நரேந்திர மோதி உள்ளூர் கைவினைப் பொருட்களுக்கு ஆதரவளிக்குமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
பிரதமர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில்,
“இந்தியாவின் எண்ணற்ற நெசவாளர்கள் மற்றும் கலைஞர்களின் பன்முகத்தன்மை மற்றும் கைவினைத் திறனை கைத்தறிகள் வெளிப்படுத்துகின்றன. எனது கைத்தறி, எனது பெருமை என்ற உணர்ச்சியை மேம்படுத்தும் வகையில் நமது நெசவாளர்களுக்கு ஆதரவளிக்கும் தருணமாக தேசிய கைத்தறி தினம் விளங்குகிறது. உள்ளூர் கைத்தறிப் பொருட்களுக்கு ஆதரவளிப்போம்!” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற மீராபாய் சானுவின் சுட்டுரைச் செய்தியை மேற்கோள் காட்டி, பிரதமர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தி பின்வருமாறு:
“கடந்த சில ஆண்டுகளில் கைத்தறிகள் மீதான ஆர்வம் புத்துயிர் பெற்றுள்ளது. எனது கைத்தறி, எனது பெருமையின் உணர்வுக்கு மீராபாய் சானு ஆதரவளிப்பதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். தற்சார்பு இந்தியாவைக் கட்டமைப்பதில் கைத்தறித்துறை தொடர்ந்து பங்களிக்கும் என்பதை நான் நம்புகிறேன்”.
–எஸ்.சதிஸ் சர்மா.