பிரதமரின் கிசான் திட்டத்தில், 9வது தவணையை பிரதமர் நரேந்திர மோதி அளித்தார்.

The Prime Minister, Shri Narendra Modi released the next installment of  financial benefit under Pradhan Mantri Kisan Samman Nidhi (PM-KISAN) today through video conference. The Prime Minister also interacted with farmer beneficiaries during the event. This enabled the transfer of an amount of more than Rs. 19,500 crores to more than 9.75 crores beneficiary farmer families. It was the 9th installment of the financial benefit under Pradhan Mantri Kisan Samman Nidhi (PM-KISAN).

Addressing the gathering, the Prime Minister talked of the sowing season and expressed the hope that the amount received today will help the farmers. He also mentioned that the scheme of Kisan Infrastructure Fund with 1 lakh crore rupees corpus also completes one year today.  The Prime Minister touched upon initiatives like Mission Honey-Bee and making saffron from Jammu & Kashmir in the NAFED shops. Honey mission has led to 700 crore export of honey resulting in extra income for farmers.

Referring to the upcoming 75th Independence day, he said that apart from being an occasion for  pride  it is also an opportunity for new resolutions. We have to take this opportunity to decide where we want to see India in the coming 25 years, he said. The Prime Minister remarked that our agriculture and our farmers have a big role in determining the condition of India in 2047, when the country completes 100 years of independence. It is time to give direction to India’s agriculture to face new challenges and take advantage of new opportunities. He called for changes in the Indian agriculture according to the demands of changing times. He lauded the farmers for record production during the pandemic and outlined the government’s measures to reduce the hardships of farmers during the difficult period. The Government ensured uninterrupted supply of seeds, fertilizers and access to markets. Urea was available throughout and when prices of DAP increased manifold in the international market, the government immediately arranged 12000 crore rupees for that so that the load is not felt by the farmers.

The Prime Minister said the government has made the biggest ever purchase from farmers at MSP, be it Kharif or Rabi season. With this, about Rs 1,70,000 crore have reached directly into the accounts of rice farmers and about Rs. 85,000 crore have gone directly into the account of wheat farmers.

The Prime Minister reminded that he urged the farmers to increase the production of pulses, when there was a shortage of pulses in the country, a few years ago. He said that as a result, there has been an increase of almost 50 percent in the production of pulses in the country in the last 6 years.

The Prime Minister highlighted National Edible Oil Mission-Oil Palm i.e. NMEO-OP as a pledge for achieving self-reliance in edible oil. Today, when the country is remembering the Quit India Movement, on this historic day, this resolve fills us with new energy, he said. He said that through the National Edible Oil Mission-Oil Palm mission, more than Rs 11,000 crore will be invested in the cooking oil ecosystem. Government will ensure that farmers get all the facilities, from quality seeds to technology. The Prime Minister pointed out that today, for the first time, India has reached among the top-10 countries of the world in terms of agricultural exports. The country has set new records of agricultural exports during the Corona period. Today, when India is becoming recognized as a big agricultural exporting country, it is not right to stay dependent on imports for our needs of edible oil.

The Prime Minister remarked that the small farmers are now being given utmost priority in the agricultural policies of the country. With this spirit, in the last few years, serious efforts were being made to provide convenience and security to these small farmers. Under PM Kisan Samman Nidhi, Rs 1 lakh 60 crore has been given to farmers so far. Out which Rs 1 lakh crore were transferred to small farmers during the pandemic period. More than 2 crore Kisan Credit Cards were issued during Corona persion, most of them to small farmers. Such farmers will be benefitted by the agriculture infrastructure and connectivity infrastructure that is coming up in the country. Initiatives like Food Parks, Kisan Rails and Infrastructure Fund will help small farmers. In the year gone by, more than 6 thousand projects have been approved under the Infrastructure Fund. These steps increase the small farmer’s access to market and his bargaining power through FPOs, said the Prime Minister.

xxxxxxxxxx

பிரதமரின் கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழான நிதியுதவியின் அடுத்த தவணைத் தொகையை காணொலி மூலம் பிரதமர் நரேந்திர மோதி அளித்தார்.

இந்நிகழ்ச்சியின் போது, விவசாய பயனாளிகளிடம் பிரதமர் கலந்துரையாடினார். இதன் மூலம் 9.75 கோடிக்கும் மேற்பட்ட விவசாய குடும்பங்களுக்கு, ரூ.19,500 கோடிக்கும் மேற்பட்ட தொகை பரிமாற்றம் செய்யப்பட்டது. பிரதமரின் கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ், இது 9வது தவணை நிதியுதவி ஆகும்.

இந்நிகழ்ச்சியில் பயனாளிகள் இடையே விதைப்பு காலம் பற்றி பேசிய பிரதமர், இன்று பெறப்பட்ட தொகை விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நம்பிக்கை தெரிவித்தார். ரூ.1 லட்சம் கோடி தொகுப்பிலான கிசான் உள்கட்டமைப்பு நிதி திட்டம், இன்று ஓராண்டை நிறைவு செய்கிறது எனவும் அவர் குறிப்பிட்டார். இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தை கூட்டமைப்பு கடைகளில் தேன் மற்றும் குங்குமப் பூ விற்பனை திட்டம் குறித்தும் பிரதமர் பேசினார். தேன் திட்டம், ரூ.700 கோடி ஏற்றுமதிக்கு வழிவகுத்துள்ளது, இதன் மூலம் விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது.

வரவிருக்கும் 75வது சுதந்திர தினத்தை குறிப்பிட்ட பிரதமர், இது பெருமிதமான தருணம் மட்டும் அல்ல, புதிய தீர்மானங்களுக்கான வாய்ப்பு என கூறினார். வரும் 25 ஆண்டுகளில், இந்தியாவை நாம் எங்கே பார்க்க விரும்புகிறோம் என்பதை தீர்மானிக்க, நாம் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். 2047-ம் ஆண்டு 100வது சுதந்திர தினத்தை நாடு நிறைவு செய்யும்போது, இந்தியாவின் நிலையை தீர்மானிப்பதில், நமது வேளாண்மை மற்றும் விவசாயிகளுக்கு மிகப் பெரிய பங்கு உண்டு என பிரதமர் குறிப்பிட்டார். புதிய சவால்களை சந்திக்கவும், புதிய சந்தர்ப்பங்களின் சாதகத்தை எடுத்துக் கொள்ளவும், இந்திய வேளாண்மைக்கு வழிகாட்ட இதுதான் சரியான நேரம். மாறிவரும் காலத்தின் தேவைகளுக்கு ஏற்ப, இந்திய விவசாயத்தில் மாற்றங்கள் தேவை என அவர் கூறினார்.

பெருந்தொற்று காலத்தில், உற்பத்தியில் வரலாறு படைத்ததற்காக விவசாயிகளை அவர் பாராட்டினார். இந்த சிக்கலான நேரத்தில், விவசாயிகளின் கஷ்டங்களை குறைக்க அரசு எடுத்த நடவடிக்கைகளை அவர் சுட்டிக் காட்டினார். விதைகள், உரங்களின் தடையற்ற விநியோகம் மற்றும் சந்தைகளுக்கான அணுகலை அரசு உறுதி செய்தது. யூரியா ஆண்டு முழுவதும் கிடைத்தது மற்றும் சர்வதேச சந்தையில் டிஏபி உரங்களின் விலை பல மடங்கு அதிகரித்தபோதும், அரசு உடனடியாக ரூ.12,000 கோடி மானியத்தை ஏற்பாடு செய்தது. இதனால் இந்த சுமையை விவசாயிகளால் உணரப்படவில்லை.

காரிப் அல்லது ராபி சந்தை பருவமாக இருக்கட்டும், குறைந்தபட்ச ஆதரவு விலையில், விவசாயிகளிடமிருந்து இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பெரிய கொள்முதலை அரசு செய்துள்ளது என பிரதமர் கூறினார். இதன் காரணமாக, சுமார் ரூ.1,70,000 கோடி நெல் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக சென்றுள்ளது, சுமார் ரூ.85,000 கோடி கோதுமை விவசாயிகளின் வங்கி கணக்குகளுக்கு நேரடியாக சென்றுள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன்பு நாட்டில் பருப்புக்கு பற்றாக்குறை ஏற்பட்டபோது, அவற்றின் உற்பத்தியை அதிகரிக்க விவசாயிகளிடம் வலியுறுத்தியதை பிரதமர் நினைவுப்படுத்தினார். இதன் காரணமாக, கடந்த 6 ஆண்டுகளில், நாட்டில் பருப்பு உற்பத்தி 50 சதவீதம் அதிகரித்துள்ளது.

தேசிய சமையல் எண்ணெய் திட்டம் – பாமாயில்-ஐ சுட்டிக் காட்டிய பிரதமர், சமையல் எண்ணெய் உற்பத்தியில் தற்சார்பு நிலையை அடைய எடுத்த உறுதிமொழிதான் தேசிய சமையல் எண்ணெய் திட்டம்-பாமாயில் என கூறினார். இன்றைய வரலாற்று சிறப்புமிக்க நாளில், வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை, நாடு நினைவுக் கூறுகையில், இந்த தீர்மானம், நமக்கு புதிய சக்தியை அளிக்கிறது என அவர் கூறினார். தேசிய சமையல் எண்ணெய் -பாமாயில் திட்டம் மூலம், சமையல் எண்ணெய் உற்பத்திக்கு ரூ.11,000 கோடிக்கு மேல் முதலீடு செய்யப்படும் என அவர் கூறினார். தரமான விதைகள் முதல் தொழில்நுட்பம் வரை விவசாயிகளுக்கு அனைத்து வசதிகளும் கிடைப்பதை அரசு உறுதி செய்யும். முதல் முறையாக, வேளாண் ஏற்றுமதியில் முதல் 10 நாடுகளில், இந்தியா இடம்பிடித்துள்ளது என பிரதமர் சுட்டிக் காட்டினார். கொரோனா காலத்தில், வேளாண் ஏற்றுமதியில் நாடு புதிய சாதனை படைத்துள்ளது. இன்று, இந்தியா மிகப் பெரிய வேளாண் ஏற்றுமதி நாடாக அங்கீகரிக்கப்படும் போது, சமையல் எண்ணெய் தேவைக்கு இறக்குமதியை சார்ந்திருப்பது சரியானது அல்ல.

நாட்டின் வேளாண் கொள்கைளில் சிறு விவசாயிகளுக்கு, தற்போது அதிக முன்னுரிமை அளிக்கப்படுகிறது என பிரதமர் குறிப்பிட்டார். இந்த உணர்வுடன், கடந்த சில ஆண்டுகளில், சிறு விவசாயிகளுக்கு வசதி மற்றும் பாதுகாப்பு வழங்க தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. பிதமரின் கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ், இதுவரை விவசாயிகளுக்கு ரூ.1 லட்சத்து 60 கோடி வழங்கப்பட்டுள்ளது. இவற்றில் ரூ. 1 லட்சம் மோடி கொரோனா காலத்தில், சிறு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. கொரோனா காலத்தில், 2 கோடிக்கும் மேற்பட்ட கிசான் கடன் அட்டைகள் வழங்கப்பட்டன. இதுபோன்று விவசாயிகள், நாட்டில் வரவுள்ள வேளாண் கட்டமைப்பு மற்றும் இணைப்பு உள்கட்டமைப்புகளால் பயனடைவர். உணவு பூங்காக்கள், கிசான் ரயில்கள் மற்றும் உள்கட்டமைப்பு நிதி ஆகியவை சிறு விவசாயிகளுக்கு உதவும். கடந்தாண்டில், உள்கட்டமைப்பு நிதி திட்டத்தின் கீழ், 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டன. இந்த நடவடிக்கைகள், சிறு விவசாயிகளின் சந்தைகளுக்கான அணுகலையும், விவசாய உற்பத்தியாளர் சங்கம் மூலம் பேரம் பேசும் சக்தியையும் அதிகரித்தது என்றும் பிரதமர் கூறினார்.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply