Union Minister of Commerce & Industry, Textiles, Consumer Affairs and Food & Public Distribution Shri Piyush Goyal and Minister of State for Textiles Smt Darshana Vikram Jardosh jointly inaugurated several events on the 7th National Handloom National Day on 7 August 2021 virtually, including Design Resource Centre at Kanchipuram, Building of Weavers Centre at Raigarh, Chhattisgarh and the Virtual Buyer Seller Meet and the Craft Villages at Kerala, Assam and Srinagar.
Speaking on the occasion, Shri Goyal said the steps will be taken to increase production of Handloom Sector from the present level of Rs 60,000 crore to over Rs 1,25,000 crore. Also, the export of Handloom items is to be increased from the existing of Rs 2500 crore to Rs 10000 crore in the next three years.
The Minister also said that in the 75th year of Independence, Prime Minister Shri Narendra Modi has urged all of us as a nation to buy Indian handloom products and showcase their grandeur by associating with #MyHandloomMyPride.
The Minister urged the people to buy atleast one handloom item in order to promote the weavers and handloom sector.
This function was organised by Ministry of Textiles under the guidance of Shri Upendra Prasad Singh, IAS, Secretary Textiles and Shri Sanjay Rastogi, IAS, The Development Commissioner of Textiles.
An handloom exhibition “Celebrating MyHandloomMyPride” was organised at Moti Bagh, New Delhi, as part of National Handloom Day events.
ஏழாவது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு, காஞ்சிபுரத்தில் வடிவமைப்பு வள மையத்தை மத்திய ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் கோயல் காணொலி காட்சி மூலம் தொடங்கிவைத்தார்.
தேசிய கைத்தறி தினம் கடந்த 7ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. புதுதில்லியில் நடந்த தொடக்க நிகழ்ச்சியில், மத்திய ஜவுளித்துறை அமைச்சர் பியூஸ் கோயல், இத்துறை இணையமைச்சர் தர்ஷனா விக்ரம் ஜர்தோஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். இவர்கள் காணொலி மூலம் காஞ்சிபுரத்தில் வடிவமைப்பு வள மையம், சத்தீஸ்கர் ராய்கரில் நெசவாளர்கள் சேவை மைய கட்டிடம் மற்றும் மெய்நிகர் கண்காட்சி, கேரளா, அசாம் மற்றும் ஸ்ரீநகரில் கைவினை கிராமங்கள் போன்றவற்றை தொடங்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், கைத்தறி துறை உற்பத்தியை தற்போதைய அளவான ரூ,60,000 கோடியிலிருந்து ரூ.1,25,000 கோடிக்கு மேல் அதிகரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன என்றும், கைத்தறி பொருட்கள் ஏற்றுமதி தற்போதைய அளவான ரூ. 2,500 கோடியிலிருந்து, அடுத்த 3 ஆண்டுகளில் ரூ.10,000 கோடியாக அதிகரிக்கப்படவுள்ளன என்றும் தெரிவித்தார்.
சுதந்திர இந்தியாவின் 75வது ஆண்டில், நாம் அனைவரும் இந்திய கைத்தறி தயாரிப்புகளை வாங்கி, எனது கைத்தறி, எனதுபெருமை (#MyHandloomMyPride) என்ற ஹேஸ்டாக்குடன் தங்களை தொடர்பு படுத்திக் கொள்ளும்படி பிரதமர் நரேந்திர மோதி கேட்டுக்கொண்டுள்ளார் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறினார் . நெசவாளர்களையும், கைத்தறி துறையையும் வளர்க்க, மக்கள் குறைந்தது ஒரு கைத்தறி தயாரிப்பையாவது வாங்க வேண்டும் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வலியுறுத்தினார்.
தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு, புதுதில்லி மோதி பாக் பகுதியில் கைத்தறிக் கண்காட்சி நடத்தப்பட்டது. இதில் 18 மாநிலங்களைச் சேரந்த 22 நிறுவனங்கள் பங்கேற்றன. இந்த கண்காட்சி ஆகஸ்ட் 12ம் தேதி வரை நடைபெறும்.
கைத்தறி ஏற்றுமதி வளர்ச்சி கவுன்சில், மெய்நிகர் ஜவுளி கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்துள்ளது. இந்த கண்காட்சி ஆகஸ்ட் 7ம் தேதி முதல் 11ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் 57 நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. வங்கதேசம், மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, நேபாளம், பூட்டான் மற்றும் மியான்மர் போன்ற அண்டை நாடுகளில் இருந்து சுமார் 200 வர்த்தக பார்வையாளர்கள், இந்த மெய்நிகர் கண்காட்சியை பார்வையிட்டுள்ளனர்.
–எம்.பிரபாகரன்