மனுதாரர் திருச்சியில் தங்கி இருந்து தில்லை நகர் காவல் நிலையத்தில் தினமும் காலை 10.30 மணிக்கு கையெழுத்திடவேண்டும்.
எதிர்காலத்தில் மதம் மற்றும் அரசியல் தலைவர்களுக்கு எதிரான பொதுவில் கூறத்தகாத இழிவான வார்த்தைகளை (unparliamentary words) பயன்படுத்த மாட்டேன் என்று மனுதாரர் ஒரு உறுதிமொழிப் பத்திரத்தையும் தாக்கல் செய்ய வேண்டும்.
இந்த வழக்கு சம்மந்தமான விசாரணைக்கு எந்த நேரத்திலும் ஒத்துழைக்க வேண்டும்.
மனுதாரர் சாட்சி அல்லது ஆதாரங்களை சிதைக்கக் கூடாது.
மேற்கூறிய நிபந்தனைகளில் ஏதேனும் ஒன்றை மீறினால் மாஜிஸ்திரேட்/விசாரணை நீதிமன்றம் தகுந்த நடவடிக்கை எடுக்க உரிமை உண்டு.
மேற்காணும் நிபந்தனைகளில் அடிப்படையில் கத்தோலிக்க பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவுக்கு, உயர்நீதிமன்ற மதுரை கிளை நிபந்தனை ஜாமின் வழங்கியது.
–Dr.துரைபெஞ்சமின்,
Editor and Publisher
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : ullatchithagaval@gmail.com
இதுத்தொடர்பான முந்தையச் செய்திகளுக்கு கீழ்காணும் இணைப்பைக் ‘கிளிக்’ செய்யவும்.