லே பகுதியில் மூங்கில் வளர்ப்பு திட்டத்துக்கு ராணுவம் உதவி!

The Project BOLD (Bamboo Oasis on Lands in Drought) of Khadi and Village Industries Commission (KVIC) has received Indian Army’s support in Leh. On August 15, Army planted 20 bamboo saplings at its compound in Leh. These 20 saplings of special bamboo species were handed over to the Army by KVIC on 12th August at Jammu for plantation in Leh. This is the first ever attempt to grow bamboo trees in the high Himalayan terrains with the objective of preventing land degradation and developing green cover. In continuation with this effort, 1000 bamboo saplings will be planted at village Chuchot in Leh on 18th August. These bamboo plants will be ready for harvest in 3 years. While this will create sustainable income for the local tribal population; it will also contribute to environment and land protection as envisaged by the Prime Minister.

வறண்ட நிலங்களில் மூங்கில் சோலை அமைக்கும் (Bamboo Oasis on Lands in Drought- போல்ட்) திட்டத்தை காதி மற்றும் கிராம தொழில் ஆணையம் (KVIC) மேற்கொண்டு வருகிறது. இதற்கு லே பகுதியில் உள்ள இந்திய ராணுவம் ஆதரவளித்துள்ளது. லே பகுதியில் உள்ள ராணுவ முகாமில், 20 மூங்கில் கன்றுகளை ராணுவத்தினர் நேற்று நட்டனர். இந்த சிறப்பு வகை மூங்கில் கன்றுகளை, ராணுவத்திடம், காதி மற்றும் கிராம தொழில் ஆணையம் ஜம்முவில் கடந்த 12ம் தேதி வழங்கியது. நிலம் வீணாவதை தடுக்கவும், பசுமையை ஏற்படுத்தும் நோக்கில், இமயமலைப் பகுதியில் முதல் முறையாக மூங்கில் வளர்க்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, 1000 மூங்கில் கன்றுகள், லே பகுதியில் உள்ள சுச்சோட் கிராமத்தில் வரும் 18ம் தேதி நடப்படவுள்ளன. இந்த மூங்கில் கன்றுகள், 3 ஆண்டுகளில் அறுவடைக்கு தயாராகும். இது உள்ளூர் பழங்குடியின மக்களுக்கு நிலையான வருவாயை ஏற்படுத்தும்.

பிரதமரின் தொலைநோக்கிற்கு ஏற்ப சுற்றுச்சூழல் மற்றும் நிலத்தை பாதுகாப்பதில், மூங்கில் கன்றுகள் முக்கிய பங்கு வகிக்கும்.

எம்.பிரபாகரன்

Leave a Reply