அனைவரும் பாதுகாப்பாக இல்லாத வரை; நாமும் பாதுகாப்பாக இருக்க முடியாது!-ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு.

ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலின் இந்த மாத தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. பயங்கரவாததால் சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறித்து நியூயார்க்கில் நடந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இதில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசினார்.

தீவிரவாத அமைப்புகள் எந்த தண்டனையும் இன்றி சில நாடுகளின் ஆதரவுடன் தைரியமாக செயல்படுவதாகவும், பயங்கரவாதத்திற்கு எதிரான ஒருமித்த கூட்டு நடவடிக்கை தேவை எனவும் அவர் வலியுறுத்தினார்.

ஆப்கனில் தற்போதுள்ள நிலைமை மற்றும் இந்தியா மீதான தீவிரவாத தாக்குதல்களை, உலக நாடுகள் சர்வதேச பிரச்சனையாக பார்க்க வேண்டும். எந்தவித அடிப்படையும் இன்றி தீவிரவாதிகளை அங்கீகரிக்க கோருவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆப்கன் மக்களுக்கு இந்தியா எப்போதும் துணை நிற்கும். அங்கு மாட்டிக் கொண்ட இந்தியர்களை மீட்க உலக நாடுகளுடன் சேர்த்து முயற்சித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

ஐஎஸ் தீவிரவாத அமைப்பு அதன் எல்லையை விரிவாக்குவதுடன்; நிதி ஆதாரத்தையும் பெருக்குகிறது. கொலைகளுக்கான வெகுமதிகளை அவர்கள் பிட்காயினில் கூட வழங்குகிறார்கள்.

அனைவரும் பாதுகாப்பாக இல்லாத வரை; நாமும் பாதுகாப்பாக இருக்க முடியாது.

இவ்வாறு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசினார்.

–Dr.துரைபெஞ்சமின்,
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : ullatchithagaval@gmail.com

Leave a Reply