மணிப்பூர் ஆளுநராக இல. கணேசன் நியமனம்!

மணிப்பூர் ஆளுநராக இருந்த நஜ்மா ஹெப்துல்லாவின் பதவிக்காலம் கடந்த 20-ம் தேதியுடன் நிறைவு பெற்றது. இதனையடுத்து, சிக்கிம் கவர்னர் கங்கா பிரசாத் கூடுதல் பொறுப்பாக மணிப்பூர் கவர்னர் பதவி வழங்கப்பட்டது.

இந்நிலையில், பாஜ மூத்த தலைவர் இல.கணேசனை மணிப்பூர் ஆளுநராக குடியரசுத் தலைவர் நியமித்துள்ளார். தமது அலுவலகப் பணியைத் தொடங்கும் நாள் முதல் அவர் இந்த பொறுப்பை வகிப்பார் என்று தெரிவித்துள்ளார்.

எம்.பிரபாகரன்

Leave a Reply