மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் செயலாளராக அபூர்வ சந்திரா பொறுப்பேற்பு.

மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் செயலாளராக அபூர்வ சந்திரா, இ.ஆ.ப. (மகாராஷ்டிரா: 1988) இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். குடிசார் பொறியாளராக தேர்ச்சிபெற்ற சந்திரா, குடிசார் பொறியியலில் இளங்கலை பட்டத்தையும், தில்லி இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் கட்டுமான பொறியியலில் முதுகலைப் பட்டத்தையும் பெற்றுள்ளார்.

அபூர்வ சந்திரா இதற்கு முன்பு கடந்த 2020-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தொழிலாளர் குறியீடுகளை அமல்படுத்துவதற்காக 1.10.2020 முதல் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் செயலாளராக பணிபுரிந்தார்.

அவரது வழிகாட்டுதல்களின்படி, அனைத்து பங்குதாரர்களுடன் விரிவாக கலந்தாலோசித்து நான்கு தொழிலாளர் குறியீடுகளுக்கான திட்டம் வகுக்கப்பட்டது. ரூபாய் 23,000 கோடி மதிப்பில் முறைசார்ந்த துறைகளில் 78.5 கோடி பணியாளர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்குவதற்காக தற்சார்பு இந்தியா வேலைவாய்ப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கொள்முதல் நடைமுறைகளைத் துரிதப்படுத்துவது வாயிலாக இந்திய ஆயுதப் படைகளுக்கு மேலும் வலு சேர்ப்பதற்காக பாதுகாப்பு அமைச்சகத்தில் கொள்முதலுக்கான தலைமை இயக்குநராக அபூர்வ சந்திரா கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் பணியாற்றினார்.

திவாஹர்

Leave a Reply