ஆப்கானிஸ்தான், காபூல் விமான நிலையத்தில் ISIS-K பயங்கரவாதிகள் நடத்திய இரட்டை குண்டுவெடிப்புகளில் அமெரிக்க மீட்புப்படையைச் சேர்ந்த 13 பேர் உள்பட 90-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 150-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
காபூல் விமான நிலையத்தில் தற்போது 5,800 அமெரிக்க வீரர்களும்; சுமார் 1000 பிரிட்டன் வீரர்களும் உள்ளனர்.
ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறுவதற்காக அப்பாவி மக்கள் காபூல் விமான நிலையத்தை நோக்கி வந்த வண்ணம் உள்ளனர்.
விமான நிலையத்திற்கு உள்ளேயும்; வெளியேயும் மனிதர்களின் அழுக்குரல் மரண ஓலமாக எதிரொளிக்கிறது. எந்த நேரத்திலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற நிலையிலும்; வேறு வழியில்லாமல் அப்பாவி மக்கள் மரணப் பயத்தோடு உயிரை கையில் பிடித்துக்கொண்டு மீட்பு விமானங்களுக்காக காத்துக்கிடக்கின்றனர்.
ஒருபுறம் தலிபான்கள் தாக்குதல்; மறுபுறம் தலிபான்களின் எதிரியான ISIS-K பயங்கரவாதிகளின் தாக்குதல்; மற்றொரு புறம் பாதுகாப்பு என்ற பெயரில் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் வீரர்களின் அவமதிப்பு மற்றும் அச்சுறுத்தல்….!-இப்படி காபூல் விமான நிலைய பகுதிகள் முழுவதுமே போர்க்களமாக மாறிபோய் உள்ளது. இதில் பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியோர்களின் நிலை மிகவும் பரிதாபமாக உள்ளது.
மீட்பு பணியில் ஈடுப்பட்டு வரும் ஐ.நா. ஊழியர்கள் மீதும் தலிபான்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
ஆனால், இவற்றையெல்லாம் இன்னும் எத்தனை நாட்களுக்குதான் வேடிக்கைப் பார்த்துக்கொண்டு சர்வதேச சமூகம் மௌனமாக இருக்கப்போகிறது?!
–Dr.துரைபெஞ்சமின்,
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : ullatchithagaval@gmail.com