வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 79-வது ஆண்டை குறிக்கும் வகையில் கண்காட்சி !

நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆவதை ஒட்டி கொண்டாடப்பட்டு வரும் விடுதலையின் அம்ரித் மகோத்சவத்தின் ஒரு பகுதியாக வெள்ளையனே வெளியேறு இயக்கம் குறித்த கண்காட்சி ஒன்றுக்கு இந்திய தேசிய ஆவணக் காப்பகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பொது ஆவணங்கள், தனிப்பட்ட கடிதங்கள், வரைபடங்கள் புகைப்படங்கள் மற்றும் தொடர்புடைய இதர பொருட்களின் மூலம் இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் இந்த கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 2021 நவம்பர் 8 வரை காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை பொதுமக்கள் இந்த கண்காட்சியை காணலாம்.

வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் பயணத்தை கண்காட்சி எடுத்துரைக்கிறது. பல்வேறு முக்கிய பிரிவுகளை இக்கண்காட்சி தன்னகத்தே கொண்டுள்ளது. அவற்றில் சில வருமாறு:

வெள்ளையனே வெளியேறு இயக்கத்துக்கு வித்திட்ட சூழ்நிலைகள்: இந்திய தலைவர்களின் ஒப்புதல் இல்லாமல் இரண்டாம் உலகப்போரில் இந்தியா கலந்து கொள்ளும் என்று 1939-ம் ஆண்டு பிரிட்டிஷ் அரசாங்கம் அறிவித்தது. இதைத் தொடர்ந்து பிரிட்டிஷ் இந்தியாவின் மாகாணங்களில் இருந்து அமைச்சர்கள் ராஜினாமா செய்தனர்.

முக்கிய அம்சங்கள்: கிரிப்ஸ் இயக்கத்தின் தோல்வியை தொடர்ந்து ஏற்பட்ட நிலைமையை கண்காட்சியை சரியாக வெளிப்படுத்தி உள்ளது. வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் முக்கிய காரணமாக இது அமைந்தது. கிரிப்ஸ் இயக்கத்தை பின் தேதியிட்ட காசோலை என்று மகாத்மா காந்தியடிகள் விமர்சித்தார்.

கிரிப்ஸ் இயக்கம் குறித்து 1942-ம் ஆண்டு ஏப்ரல் 22 அன்று திரு மகாதேவ் தேசாய் எழுதிய கடிதம் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளது.

எல் ஈ டி திரையில் ஒருவர் தமது விரலை வைத்த உடன் விவரங்களை வெளியிடும் அமைப்பு தொழில்நுட்பத்தின் உதவியுடன் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளது பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கிறது.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply