டெல்லி மெட்ரோ ரயில் நிலையங்களில் திருநங்கைகளுக்கு தனி கழிப்பறைகள்!

திருநங்கைகளுக்கு எதிரான பாலின பாகுபாட்டைத் தடுப்பதற்காகவும், இயற்கை உபாதைகளுக்கு அவர்களுக்கு பாதுகாப்பான இடத்தை வழங்குவதற்கும், தில்லி மெட்ரோ முன்னுரிமை அளித்து செயல்பட்டு வருகிறது.

அதன் அடிப்படையில் தற்போது டெல்லி மெட்ரோ நெட்வொர்க் முழுவதும் பரவியிருக்கும் மெட்ரோ ரயில் நிலையங்களில் 347 தனித்தனி கழிப்பறைகள் உள்ளன. இந்த கழிப்பறைகளுக்கு திருநங்கைகளை வழிநடத்த, ‘மாற்றுத்திறனாளிகள்’ மற்றும் ‘திருநங்கைகள்’ ஆகிய இரு குறியீடுகளுடன் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழி அடையாளங்களும் இந்த கழிப்பறைகளுக்கு அருகில் நிறுவப்பட்டுள்ளன.

அவர்களுக்கான தனி கழிப்பறை வழங்கப்பட்டாலும், சுய-அடையாளம் காணப்பட்ட பாலினத்தின் அடிப்படையில், பாலின அடிப்படையிலான கழிப்பறையைப் பயன்படுத்த விரும்பும் எந்த திருநங்கைகளும் தொடர்ந்து அதைச் செய்வார்கள்.

திருநங்கைகள் (The provisions of section 22 of the Transgender Persons (Protection of Rights) Act, 2019, also mandates adequate welfare measures for the transgender persons at all public buildings including public toilet facilities) உரிமைகள் பாதுகாப்பு சட்டம் 2019, பிரிவு 22 ன் விதிகள், பொது கழிப்பறை வசதிகள் உட்பட, அனைத்து பொது கட்டிடங்களிலும் திருநங்கைகளுக்கு போதுமான நலன்புரி நடவடிக்கைகளை கட்டாயமாக்குகிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

–Dr.துரைபெஞ்சமின்,
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : ullatchithagaval@gmail.com

Leave a Reply