பீகார் மாநிலத்துக்கு என்டிபிசி நிறுவனம், மின் விநியோகம் செய்து வருகிறது. கடந்த 14.8.2021 முதல் 28.08.2021 வரை, என்டிபிசி நிறுவனம் சராசரியாக, நாள் ஒன்றுக்கு 73 மில்லியன் யூனிட் மின்சாரம் விநியோகிக்கிறது. இது இந்த காலகட்டத்தில் பீகார் மாநிலத்தின் மொத்த மின்சார நுகர்வில் 62 சதவீதம்.
2021-22ம் நிதியாண்டில் தேவை அதிகம் இருக்கும் மாதங்களாக ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மாதங்கள் இருக்கும் என ஆண்டு தொடக்கத்தில் கிழக்கு பிராந்திய மின்சார குழு தெரிவித்திருந்தது. அதற்கேற்ப, மின் தேவை குறைவாக உள்ள மாதங்களில், சில உற்பத்தி மையங்களில், பழுதுபார்க்கும் பணிகள் திட்டமிடப்பட்டிருந்தன.
இந்த நிலையங்கள் படிப்படியாக செயல்பட தொடங்கும்.
ஒடிசாவின் டார்லிபள்ளி 2வது மின் நிலையத்தில், மின் உற்பத்தி 01-09-2021-ல் தொடங்குவதால், இந்த மையத்தில் இருந்து 94 மெகாவாட் மின்சாரத்தை பீகார் பெரும்.
–எம்.பிரபாகரன்