Air Chief Marshal RKS Bhadauria PVSM AVSM VM ADC, Chief of the Air Staff (CAS) attended the Pacific Air Chiefs Symposium 2021 (PACS-21) at Joint Base Pearl Harbor-Hickam, Hawaii from 30 Aug to 02 Sep 21. The event themed “Enduring Cooperation towards Regional Stability” was attended by Air Chiefs from countries in the Indo-Pacific region. CAS was nominated as the Dean for the Symposium.
The Symposium saw deliberations through panel discussions, table top exercises and keynote addresses on topics ranging from aspects of Regional Security and the significance of Air Domain Awareness, to cooperation amongst Air Forces for Humanitarian and Disaster Relief Operations.
In addition to participation in the symposium, CAS met General Charles Q. Brown, Jr. Chief of Staff, U.S. Air Force and General Kenneth S. Wilsbach, Commander, Pacific Air Forces. He also held bilateral and multilateral meetings on defence cooperation and security with Air Chiefs from eleven other countries.
Participation in PACS 2021 provided an opportunity for enhancing mutual understanding and deepening of relationships with like-minded nations.
ஹவாயில் உள்ள ஜாயின்ட் பேஸ் பியர்ல் ஹார்பர்-ஹிக்காமில் 2021 ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 2 வரை நடைபெற்ற பசிபிக் விமானப்படை தலைவர்களின் கருத்தரங்கு 2021-ல் இந்திய விமானப்படை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் ஆர் கே எஸ் பதூரியா கலந்து கொண்டார்.
“பிராந்திய நிலைத்தன்மைக்காக ஒத்துழைப்பை மேம்படுத்துதல்” எனும் தலைப்பிலான இந்த நிகழ்ச்சியில், இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் உள்ள நாடுகளில் விமானப்படை தலைவர்கள் கலந்து கொண்டார். இந்த கருத்தரங்கின் தலைவராக இந்திய விமானப்படை தளபதி நியமிக்கப்பட்டார்.
விவாதங்கள், பயிற்சிகள் மற்றும் பிராந்திய பாதுகாப்பு, வான் விழிப்புணர்வு, மனிதநேய மற்றும் பேரிடர் நிவாரண நடவடிக்கைகளில் விமானப்படைகளுக்கிடையே ஒத்துழைப்பு உள்ளிட்ட தலைப்புகளில் சிறப்புரைகள் ஆகியவை கருத்தரங்கின் போது நடைபெற்றன.
அமெரிக்க விமானப்படையின் தலைவர் ஜெனரல் சார்லஸ் கியூ பிரவுன் மற்றும் பசிபிக் விமானப்படைகளின் தளபதி ஜெனரல் கென்னெத் எஸ் வில்ஸ்பாக் ஆகியோரை இந்திய விமானப்படை தளபதி சந்தித்தார். ராணுவ ஒத்துழைப்பு மற்றும் பாதுகாப்பு குறித்து 11 இதர நாடுகளின் விமானப்படை தளபதிகளுடன் இருதரப்பு மற்றும் பலதரப்பு கூட்டங்களையும் அவர் நடத்தினார்.
ஒத்த கருத்துடைய நாடுகள் தங்களது பரஸ்பர புரிதலை மேம்படுத்திக் கொள்வதற்கும், உறவுகளை ஆழப்படுத்திக் கொள்வதற்குமான வாய்ப்பாக பசிபிக் விமானப்படை தலைவர்களின் கருத்தரங்கு 2021 அமைந்தது.
–திவாஹர்