மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத சட்டத்தின் கீழ் உள்ள உரிமைகள் மற்றும் பலன்கள் குறித்து பணியாளர்கள் அறிந்து கொள்வதற்கான விழிப்புணர்வு வாரத்தை விடுதலையின் அம்ரித் மகோத்சவத்தின் ஒரு பகுதியாக மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் நடத்தின. சட்டத்தில் உள்ள பல்வேறு பிரிவுகளின் மூலம் பல சட்டப்பூர்வ உரிமைகளை பணி தேடுவோருக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத சட்டம் வழங்குகிறது.
இவை மக்களை சென்றடைவதற்காக பல்வேறு முயற்சிகளை மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் எடுத்தன. மாவட்ட, வட்ட மற்றும் கிராம பஞ்சாயத்து அளவிலான நிகழ்ச்சிகள் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களால் நடத்தப்பட்டன.
பல மாவட்டங்களில் இது குறித்து கிராம சபை கூட்டங்கள் நடைபெற்ற நிலையில், சில மாவட்டங்கள் பணியிடங்களுக்கே நேரடியாக சென்றன. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்ட பயனர்கள், செயல்பாட்டாளர்கள் மற்றும் அலுவலர்கள் உற்சாகத்துடன் இதில் பங்கேற்றனர். இந்த நடவடிக்கைகளின் மூலம் திட்டத்தின் முழு பலனை பயனாளிகள் பெற முடியும்.
2021 மார்ச் 12 அன்று பிரதமரால் தொடங்கப்பட்ட இந்தியாவின் 75-வது சுதந்திரத்தை குறிக்கும் விடுதலையின் அம்ரித் மகோத்சவம், 75 வாரங்களுக்கு கொண்டாடப்படும்.
–எஸ்.சதிஸ் சர்மா