சாலை கட்டமைப்புகள் வேகமாகவும், பாதுகாப்பாகவும் மற்றும் முன்பைவிட நிலையானதாகவும் உருவாக்கப்படுகின்றன!- நிதின் கட்கரி.

Union minister for Road transport and Highways Shri Nitin Gadkari has said that under the leadership of Prime Minister Shri Narendra Modi road infrastructure is being developed faster, safer andmore sustainable than ever before.In a meeting with officials of the Ministry ,NHAI ,NHIDCL and PWDs he said that it is our collective mission to give the country, road infrastructure of global standard. The ministeremphasised on safety-first approach for Road design and construction, construction of environment-friendly roads, industry-friendly approach, new technology for safe, faster and economic roads and faster construction.

Shri Gadkari said with an investment of Rs11,000 Crores the 313 km long highway will transform the road infrastructure of Punjab, Haryana and Rajasthan. He said 80% of the corridor has been completed and is scheduled to open to public by March 2022.He saidSix lane access controlled Ambala-Kotputli Greenfield Corridor is being constructed at record pace.

xxxxxx

பிரதமர் நரேந்திர மோதி தலைமையின் கீழ், சாலை கட்டமைப்பு விரைவாகவும், பாதுகாப்பாகவும் மற்றும் முன்பை விட அதிக நிலையானதாகவும் உருவாக்கப்படுகின்றன என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறினார்.

தேசிய நெடுஞ்சாலை ஆணையம், தேசிய நெடுஞ்சாலை மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சி நிறுவனம், மத்திய பொதுப் பணித்துறை அதிகாரிகளுடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் அவர் கூறியதாவது:

உலகத்தரத்திலான சாலை கட்டமைப்பை நாட்டுக்கு வழங்குவது நமது கூட்டுப் பணி. சாலை வடிவமைப்பில், பாதுகாப்புக்கு முதல் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. சுற்றுச்சூழலுக்கு ஏற்ற சாலைகள், தொழில்துறைக்கு சாதகமான அணுகுமுறை, பாதுகாப்புக்கான புதிய தொழில்நுட்பம், விரைவான மற்றும் செலவு குறைவான சாலைகள் போன்வற்றை உருவாக்க வேண்டும்.

ரூ.11,000 கோடி செலவில் 313 கி.மீ தூரத்துக்கு அமைக்கப்படும் நெடுஞ்சாலை பஞ்சாப், ஹரியானா மற்றும் ராஜஸ்தான் சாலை கட்டமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்தும். 80 சதவீத தொழில்வழித்தடங்கள் நிறைவடைந்துள்ளன. அவை 2022 மார்ச் மாதத்துக்குள் திறக்கப்படும். அம்பாலா – கோட்புத்லி தொழில்வழித்தடத்தில், 6 வழிச் சாலை அதி வேகத்தில் அமைக்கப்பட்டு வருகிறது என்று கூறினார்.

எம்.பிரபாகரன்

Leave a Reply