Sardar Iqbal Singh Lalpura took charge as the Chairman, National Commission for Minorities in the presence of Union Minister for Minority Affairs Shri Mukhtar Abbas Naqvi in New Delhi today.
Speaking on the occasion Shri Naqvi extended his best wishes to Sardar Iqbal Singh Lalpura in his new responsibility and said that his vast experience in administration, social and literary fields will be helpful in strengthening the Prime Minister Shri Narendra Modi’s commitment to “Sabka Sath, Sabka Vikas, Sabka Vishwas, Sabka Prayas”.
He said that the Government’s efforts for empowerment of all sections have shown results on ground.
Shri Naqvi said that the Government has ensured justice to the victims of 1984 riots by constituting an SIT.
The Minister stated that the long-pending demand of Kartarpur Corridor has been fulfilled and the Government has also decided to start the “Gurudwara Circuit Train” that will take passengers on a pilgrimage across the country.
Mr Lalpura said that the Prime Minister has given him an opportunity to serve the people and he would try his best to serve the society.
தேசிய சிறுபான்மையினர் ஆணைய தலைவராக சர்தார் இக்பால் சிங் லால்புரா மத்திய சிறுபான்மையினர் நல அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி முன்னிலையில் புதுதில்லியில் இன்று பொறுப்பேற்றார்.
நிகழ்ச்சியில் பேசிய திரு நக்வி, சர்தார் இக்பால் சிங் லால்புராவுக்கு தமது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்ததோடு, நிர்வாகம், சமூகம் மற்றும் இலக்கியம் உள்ளிட்ட துறைகளில் அவரது விரிவான அனுபவம், பிரதமர் நரேந்திர மோதியின் ‘அனைவருடன், அனைவருடன் நன்மைக்காக, அனைவரின் நம்பிக்கையுடன், அனைவரின் முயற்சிகளுடன்’ லட்சியத்தை வலுவாக்கும் என்றார்.
அனைத்து பிரிவினருக்கும் அதிகாரமளிப்பதற்கான அரசின் முயற்சிகள் நல்ல பலன்களை அளித்து வருவதாக கூறிய அவர், சிறப்பு விசாரணை குழுவை அமைத்து 1984 கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு நீதியை உறுதி செய்ததாக கூறினார்.
நீண்ட நாள் கோரிக்கையான கர்தார்பூர் வழித்தடம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், குருத்வாரா சர்க்யூட் ரயிலை தொடங்க அரசு முடிவெடுத்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
மக்களுக்கு சேவை செய்வதற்கான வாய்ப்பை பிரதமர் தமக்கு அளித்துள்ளதாக கூறிய லால்புரா, சமுதாயத்திற்கு சேவையாற்ற தம்மால் ஆன முயற்சிகளை எடுக்கவிருப்பதாக கூறினார்.
–திவாஹர்