பாரதீப் துறைமுகக் கழகத்தில் அலுவல் மொழி தினம் 2021 கடைபிடிக்கப்பட்டது.

Coinciding with Azadi Ka Amrit Mahostav celebrations, Rajbhasa Diwas was observed by the Paradip Port Trust. Shri A.K. Bose, Dy.Chairman, PPT administered the Rajbhasha pledge to HoDs, Dy.HoDs and other senior officials in the Board Room. Similarly, the Rajbhasha pledge was also administered in the offices by respective controlling authority.

Under the guidance of Shri N.K.Patnaik, Sr. Welfare Officer, PPT, a competition on creative writing using Rajbhasa was held among the PPT employees. Rajbhasa Diwas is being celebrated on 14th September every year as Rajbhasa was adopted by the Constitution as the Official language of the country on 14th September 1949. From the day of adoption Rajbhasha is being used in all Central Govt. offices and spreading its cultural heritage and values among the people of the country and abroad.

xxxxxxxx

விடுதலையின் அம்ரித் மகோத்ஸவக் கொண்டாட்டங்களுடன், பாரதீப் துறைமுகப் பொறுப்புக்கழகத்தில் அலுவல் மொழி தினம் இன்று கடைப்பிடிக்கப்பட்டது. துறைத்தலைவர்கள் மற்றும் இதர மூத்த அதிகாரிகளை, பாரதீப் துறைமுக பொறுப்புக்கழகத்தின் துணைத் தலைவர் ஏ.கே.போஸ் அலுவல் மொழி உறுதிமொழியை எடுக்க வைத்தார். இதே போல், அந்தந்தக் கட்டுப்பாட்டு ஆணையகத்தில் அலுவல் மொழி உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது.

பாரதீப் துறைமுகப் பொறுப்புக் கழகத்தின் மூத்த நல அதிகாரியின் வழிகாட்டுதலின் கீழ், பாரதீப் துறைமுகப் பொறுப்புக் கழக ஊழியர்களிடம் அலுவல் மொழி எழுத்துப் போட்டி நடத்தப்பட்டது. அலுவல் மொழி தினம், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 14ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அதிகாரப்பூர்வ அலுவல் மொழியாக இந்தி மொழி, கடந்த 1949ஆம் ஆண்டு செப்டம்பர் 14ஆம் தேதி அன்று அரசியல் சாசனத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அன்று முதல் மத்திய அரசு அலுவலகங்களில் அலுவல் மொழியாக இந்தி பயன்படுத்தப்பட்டு அதன் கலாச்சாரப் பாரம்பரியம் மற்றும் மதிப்புகள் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் உள்ள மக்களிடம் பரப்பப்படுகிறது.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply