ஐந்து நாடுகளின் தூதர்கள், தங்களின் நியமன சான்றிதழ்களை இந்தியக் குடியரசுத் தலைவரிடம் காணொலி காட்சி மூலம் அளித்தனர்.

ஐஸ்லாந்து, காம்பியா குடியரசு, ஸ்பெயின், புருனே, மற்றும் இலங்கை ஆகிய நாடுகளின் தூதர்களின் நியமன சான்றிதழ்களை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்றுக் கொண்டார்.

நியமன சான்றிதழ்களை அளித்தவர்கள்:

  1. மேதகு குட்னி பிரகசன், ஐஸ்லாந்து தூதர்.
  2. மேதகு முஸ்தபா ஜவரா, காம்பியா குடியரசு தூதர்.
  3. மேதகு ஜோனு மரியா ரிடா டொமினிக்ஸ், ஸ்பெயின் தூதர்.
  4. மேதகு தாதோ அலாகுதீன் முகமது தாஹா, புருனே தூதர்.
  5. மேதகு அசோகா மிலிண்டா மரகோடா, இலங்கை தூதர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய, குடியரசுத் தலைவர், தூதர்களுக்கு அவர்களின் நியமனத்துக்காவும், வெற்றிகரமான பணிக்காலத்துக்கும் வாழ்த்து தெரிவித்தார். இந்த அனைத்து நாடுகளுடனும், இந்தியா நெருங்கிய உறவை கொண்டுள்ளதாகவும், அமைதி மற்றும் செழிப்பில் பொதுவான கண்ணோட்டத்தை பகிர்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஒட்டு மொத்த ஆரோக்கியம் மற்றும் பொருளாதார நல்வாழ்வை உறுதி செய்வதற்காக கோவிட் -19 தொற்று நோய்க்கு தீர்க்கமான மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கையை மேற்கொள்வதற்கான உலகளாவிய முயற்சிகளில் இந்தியா முன்னணியில் உள்ளது என்று குடியரசுத் தலைவர் கோவிந்த் மீண்டும் வலியுறுத்தினார்.

உலகின் மிகப் பெரிய தடுப்பூசி நடவடிக்கையில், இந்தியர்கள், இதுவரை 800 மில்லியனுக்கும் மேற்பட்ட டோஸ்களை பெற்றுள்ளனர் என அவர் மேலும் தெரிவித்தார்.

ஐ.நா மற்றும் இதர பல அமைப்புகளுடன் இந்தியாவின் ஈடுபாடு, பரஸ்பர பயனுள்ள கூட்டுறவை அளித்துள்ளதாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கூறினார். வளரும் நாடுகள் மற்றும் குறைந்த பிரதிநிதித்துவம் உள்ள நாடுகளின் நலன்களை கருத்தில் கொண்டு, நியாயமான மற்றும் சமமான உலகளாவிய ஒழுங்கிற்கு இந்தியா உறுதிபூண்டுள்ளது என அவர் கூறினார்.

குடியரசுத் தலைவருக்கு, வெளிநாட்டு தூதர்கள், தங்கள் நாட்டு தலைவர்களின் சார்பில் வாழ்த்து தெரிவித்தனர். இந்தியாவுடனான உறவை வலுப்படுத்த தங்கள் நாட்டு தலைவர்கள் உறுதியுடன் உள்ளதாகவும் அவர்கள் வலியுறுத்தி கூறினா்.

The President of India, Shri Ram Nath Kovind, accepted credentials from Ambassadors/High Commissioners of Iceland, Republic of The Gambia, Spain, Brunei Darussalam and Democratic Republic of Sri Lanka today (September 22, 2021) in a virtual ceremony. Those who presented their credentials were:

1.   H.E. Mr. Gudni Bragason, Ambassador of Iceland

2.   H.E. Mr. Mustapha Jawara, High Commissioner of the Republic of The Gambia

3.   H.E. Mr. Jose Maria Ridao Dominguez, Ambassador of Spain

4.   H.E. Mr. Dato Alaihuddin Mohamad Taha, High Commissioner of Brunei Darussalam

5.   H.E. Mr. Asoka Milinda Moragoda, High Commissioner of Democratic Socialist Republic of Sri Lanka

Speaking on the occasion, the President congratulated the envoys on their appointment and conveyed his good wishes to them for a successful tenure in India. He noted that India enjoyed close ties with all the countries represented and shared a common vision of peace and prosperity.

President Kovind reiterated that India has been at the forefront in the global efforts to forge a decisive and coordinated response to the COVID-19 pandemic to ensure collective health and economic well-being. He further stated that under the world’s largest vaccination campaign, Indians have received more than 800 million doses so far.

President Kovind added that India’s engagement at the United Nations and other multilateral fora have resulted in mutually beneficial partnership. India remains committed to a just and equitable global order, keeping in mind interests of the developing countries and under-represented.

Ambassadors/High Commissioners conveyed good wishes to the Hon’ble President on behalf of their leaderships and reiterated the commitment of their leaders to work closely to strengthen their ties with India.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply