அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் அழைப்பின் பேரில், அரசு முறை பயணமாக, பிரதமர் நரேந்திர மோதி வாஷிங்டன் சென்றடைந்தார். வாஷிங்டன் விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
அவர் வாஷிங்டன் சென்றடைந்தபோது; அங்கு வேசான மழை தூறியதால், குடை பிடித்தபடியே பிரதமர் நரேந்திர மோதி விமானத்திலிருந்து கீழே இறங்கினார்.
அங்கிருந்து காரில் பயணம் செய்த பிரதமர் நரேந்திர மோதி, அங்கு திரளாகக் கூடியிருந்த இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சா வழியினரைக் கண்டவுடன், காரிலிருந்து உற்சாகமாக இறங்கிய பிரதமர் நரேந்திர மோதி, தான் முககவசம் மற்றும் கையுறை அணியவில்லை என்பதையும் மறந்து; உணர்ச்சி பெருக்கில் அவர்களிடம் கை குலுக்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
தன்னை பார்க்க நீண்ட நேரம் காத்திருந்த இந்தியர்களை முககவசம் மற்றும் கையுறை அணிந்து சந்திப்பது; அவர்களை அந்நியப்படுத்தும் என்பதால், உயிரையும் பொருட்படுத்தாமல், நோய் தடுப்பு பேரிடர் கட்டுப்பாட்டு விதிமுறைகளையும் மீறி, உணர்ச்சி பெருக்கில் அவர்களிடம் மிக நெருக்கமாகச் சென்று, உற்சாகமாக பிரதமர் நரேந்திர மோதி கை குலுக்கி இருப்பது, உண்மையிலுமே இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்திய பிரதமர் நரேந்திர மோதியின் பாதுகாப்பு விசியத்தில் அதிகாரிகள் மிக கவனமாக இருக்க வேண்டும். உணர்ச்சி பெருக்கில் இதுபோன்ற நிகழ்வுகள் நடப்பது மனித இயல்புதான்; ஆனால், அவர் நம் நாட்டின் முதன்மை அமைச்சர் என்பதை, பாதுகாப்பு அதிகாரிகள் கவனத்தில் கொள்ள வேண்டும். பாதுகாப்பு விசியத்தில் அலட்சியம் கூடாது. அதை அனுமதிக்கவும் கூடாது.
–Dr.துரைபெஞ்சமின்,
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : ullatchithagaval@gmail.com