கோயமுத்தூர் மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம், குருடம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட 9-வது வார்டுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் ரா.தீனதயாளன் என்பரின் மகன் கார்த்திக் (வயது 33) சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டார். இவர் ஒரு இளநிலை பொறியியல் பட்டதாரி என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இவரையும் சேர்த்து மொத்தம் 08 பேர் வேட்பு மனு தாக்கல் செய்து இருந்த நிலையில், இதில் பத்மாவதி மற்றும் வேலுமணி ஆகிய இருவரும் போட்டியில் இருந்து விலகி வேட்பு மனுவை திரும்ப பெற்றுகொண்டனர்.
இதோ அதற்கான ஆதாரம்:
தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின்படி, ஒரு ஊராட்சியில் வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ள எந்த ஒரு நபரும்; அதே ஊராட்சியில் எந்த வார்டில் வேண்டுமானாலும், ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு போட்டியிடலாம். ஆனால், இதில் முக்கிய நிபந்தனை என்னவென்றால், எந்த வார்டில் ஒரு நபர் போட்டியிடுகிறாரோ; அந்த வார்டில் வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ள ஒரு நபர் அவசியம் இவரை முன்மொழிய வேண்டும்.
அந்த வகையில் குருடம்பாளையம் ஊராட்சி 4-வது வார்டில் வசித்து வரும்; அதே 4-வது வார்டில் வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ள தீனதயாளன் என்பரின் மகன் கார்த்திக் (வயது 33) என்பர், குருடம்பாளையம் ஊராட்சி 9-வது வார்டுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்தார். தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின்படி அவரை 9-வது வார்டில் வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ள வின்சென்ட்ராஜ் என்பவர் முன்மொழிந்து உள்ளார்.
இதோ அதற்கான ஆதாரம்:
ஊராட்சி உறுப்பினர் தேர்தலில், எந்த வார்டுக்கு தேர்தல் நடக்கிறதோ; அதே வார்டில் வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ள நபர்கள் மட்டும்தான் வாக்களிக்கும் உரிமை பெற்றவர்கள். மற்ற வார்டில் வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ள நபர்கள்; அவர்கள் வேட்பாளராகவே இருந்தாலும் வாக்களிக்க முடியாது.
அந்த வகையில், குருடம்பாளையம் ஊராட்சி, 9-வது வார்டுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில், உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட கார்த்திக் என்பருக்கும், அவரது குடும்பத்தாருக்கும், குருடம்பாளையம் ஊராட்சி 4-வது வார்டு வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதால், அவரும்; அவரது தாய், தந்தை மற்றும் அவரது குடும்பத்தில் வசித்து வரும் பெரியப்பா ஆகிய நால்வருக்கும், குருடம்பாளையம் ஊராட்சி 9-வது வார்டுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் வாக்களிக்கும் உரிமை இல்லை. அதனால் அவர்கள் வாக்களிக்கவில்லை. மேலும், வேட்பாளர் கார்த்திக் மனைவிக்கு குருடம்பாளையம் ஊராட்சியில் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை.
உண்மை இவ்வாறு இருக்க; அவரது குடும்பத்தினர் கூட, அவருக்கு வாக்களிக்கவில்லை என்று அனைத்து அச்சு மற்றும் காட்சி ஊடகங்களும் உண்மைக்கு புறம்பாக செய்தி வெளியிட்டுள்ளன. இது எந்த வகையில் நியாயம்?!
பாஜகவை இழிவுப்படுத்துவதாக நினைத்துக்கொண்டு; ஒரு இளநிலை பொறியியல் பட்டதாரியையும், அவரது குடும்பத்தாரையும் அவமானப்படுத்தி இருப்பது; உண்மையிலுமே வன்மையாக கண்டிக்கத்தக்கது.
ஊராட்சி உறுப்பினர் தேர்தலை பொருத்தவரை; அனைவரும் சுயேட்சைகள்தான். அவர்கள் அரசியல் கட்சிகளின் முக்கிய பிரமுகராகவே இருந்தாலும்; அவர்களுக்கு சுயேட்சை சின்னங்கள்தான் வழங்கப்படும். அந்த வகையில், பாஜக இளைஞரணி மாவட்ட துணை தலைவராக இருக்கும் கார்த்திக் என்பருக்கும் சுயேட்சை சின்னம்தான் வழங்கப்பட்டது. ஆம், அவர் கார் சின்னத்தில்தான் போட்டியிட்டார்.
இந்த தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிட்ட கார்த்திக் ஒரு வாக்கு பெற்றார். இதற்காக அவர் ஏன் வெட்கப்பட வேண்டும்?!
அவரை விமர்சித்த நபர்கள் தான் உண்மையிலுமே வெட்கப்பட வேண்டும்.
ஓட்டு அரசியலில் தேர்தல் படுதோல்வி என்பது ஜனநாயகத்தில் மிக சர்வ சாதாரணம்.
இந்த வரலாறு கூட அறியாதவர்கள்; எப்படி ஊடகக்காரர்களாக இருக்க முடியும்?!
–Dr.துரைபெஞ்சமின்,
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : ullatchithagaval@gmail.com
இந்த செயல் வேதனை அளிக்கிறது…