அருவறுக்கத்தக்க ஆபாச படங்களையும்; ஆபாசப் பேச்சுக்களையும், போலியாக சித்தரிக்கப்பட்ட அவதூறு காட்சிகளையும், அந்தந்த பிராந்திய மொழிகளில் YouTube– ல் பதிவேற்றம் செய்வதற்கு, கொஞ்சம் கூட வெட்கமில்லாமல் தொடர்ந்து அனுமதித்து வரும் YouTube–வலையொளி நிறுவனம்.
உலகில் பல்வேறு நாடுகளில் மனித குலத்திற்கு எதிராக நடக்கும் சமூக அவலங்களையும், சட்ட விரோதமான நிகழ்வுகளையும் மற்றும் மனித உரிமை மீறல்களையும் எந்த திருத்தமும் செய்யாமல், உள்ளது உள்ளபடி YouTube-ல் வீடியோவாக பதிவேற்றம் செய்தால், அப்படிப்பட்ட வீடியோப் பதிவுகளை வன்முறையாக இருக்கிறது; சமூக வழிகாட்டுதல் கொள்கைகளுக்கு விரோதமாக இருக்கிறது என; YouTube வலையொளி நிறுவனம் தொடர்ந்து ஒப்பாரி வைப்பதோடு; உடனே அவற்றை YouTube–ல் இருந்து முற்றிலுமாக அகற்றியும் விடுகிறது.
வயதுக்குட்பட்ட வீடியோக்களை 18 வயதிற்குட்பட்ட பயனர்கள் பார்க்க முடியாது (Age-restricted videos are not viewable to users who are under 18 years of age) என்று குறிப்பிட்டு வீடியோ பதிவேற்றம் செய்தாலும் கூட; அப்படிப்பட்ட வீடியோக்களையும் YouTube–நிறுவனம் முற்றிலுமாக அகற்றி விடுகிறது.
ஆபாசங்களுக்கும், சமூக அவலங்களுக்கும் வித்தியாசம் தெரியாத; வன்முறைகளுக்கும், அப்பாவி மக்கள் வதைப்படுவதற்கும் கொஞ்சம் கூட பேதம் தெரியாத; யூடியூப் (YouTube Team) நிறுவனக் குழுவினரிடம், நாம் எவ்வளவுதான் விரிவாகவும், விளக்கமாகவும் ஆங்கிலத்தில் எடுத்துரைத்தாலும்; மேல்முறையீடு செய்தாலும், அவர்கள் புத்திக்கு இதுவரை உரைக்கவே மாட்டேங்குது.
என்ன செய்வது?!- YouTube–வலையொளி நிறுவனத்தால் நாம் தான் தொடர்ந்து அதிகம் பாதிக்கப்பட்டுள்ளோம்.
வணிக நோக்கம் எதுவுமின்றி; இதழியல் தர்மத்தை உயிராக மதித்து; நேர்மையாகவும், கண்ணியமாகவும், நடுநிலையோடும், உண்மையாகவும் தொடர்ந்து செய்தி வழங்கும் நமக்கு; YouTube–வலையொளி நிறுவனம் தொடர்ந்து வழங்கும் பரிசு இதுதான்.
தலிபான்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஆப்கானிஸ்தானில், குண்டூஸ் நகரில் உள்ள ஜியா மசூதியில் 08.10.2021 அன்று வெள்ளிக்கிழமை நடந்த தற்கொலைப்படை மனித வெடிகுண்டு தாக்குதலில், தொழுகையில் இருந்த 100-க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் பலியானார்கள்!-300- க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. குண்டுஸ் நகரம் முழுவதும் மரண ஓலமாக இருக்கிறது..! ஆம், “குண்டூஸ் நகர் மசூதியில் நடந்த குண்டு வெடிப்பு!-ஆப்கானிஸ்தானில் நடந்த துயரம்”!-என்ற தலைப்பில், எந்த திருத்தமும் செய்யாமல், உள்ளது உள்ளபடி உண்மையான வீடியோவை YouTube-வலையொளியில் பதிவேற்றம் செய்து இருந்தோம். அந்த வீடியோ பதிவை YouTube-வலையொளி நிறுவனம் YouTube-ல் இருந்து அகற்றியதோடு; அதற்காக நம்மை 2 வாரங்களுக்கு YouTube-ல் எந்த ஒரு வீடியோவும் பதிவேற்றம் செய்யக்கூடாது எனவும், நமது நிறுவனத்திற்கு தடைவிதித்துள்ளது.
ஒரு வேளை தலிபான்களைப் புனிதர்களாகவும்; அவர்களது நிர்வாக செயல்பாடுகளை வேதவாக்காகவும் சித்தரிப்பதற்கு YouTube-வலையொளி நிறுவனம் முயற்சிக்கிறதோ?! (அல்லது) தலிபான்களை கண்டு YouTube-வலையொளி நிறுவனம் பயப்படுகிறதோ?! என்ற சந்தேகம் தற்போது நமக்கு எழுந்துள்ளது.
எது எப்படியோ; திருந்த வேண்டியது நாம் அல்ல; YouTube-வலையொளி நிறுவனம் தான் தனது கொள்கையை திருத்திக்கொள்ள வேண்டும்.
ஏனென்றால், நாம் ஊர் குருவி அல்ல; பீனிக்ஸ் பறவை!
–Dr.துரைபெஞ்சமின்,
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : ullatchithagaval@gmail.com
யூடியூப் (The YouTube) நிறுவனம் தொடர்பான முந்தையச் செய்திகளுக்கு, கீழ்காணும் இணைப்பை “கிளிக்” செய்யவும்.