மத்திய மின்சாரம், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர், என்எச்பிசி துல்ஹஸ்தி மின் நிலையம் மற்றும் கிஷங்கங்கா மின் நிலையத்தின் அணைக்கட்டு தளத்தை பார்வையிட்டார்.

ஜம்மு & காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் பந்திபூரா மாவட்டத்தில் உள்ள குரேசிலில் இருக்கும் என்எச்பிசி-யின் 330 மெகாவாட் மின் நிலையத்தின் அணை தளத்தை மத்திய மின்சாரம், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் ஆர் கே சிங் பார்வையிட்டார்.

மின்சார அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் எஸ் கே ஜி ரஹாதே, என்எச்பிசி தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஏ கே சிங், ஜம்மு & காஷ்மீர் மின்சார மேம்பாட்டு துறையின் முதன்மை செயலாளர் திரு ரோஹித் கன்சால் ஆகியோர் அமைச்சருடன் உடன் சென்றனர்.

அணை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளை அமைச்சர் ஆய்வு செய்தார். மின் நிலைய கட்டுமானப் பணிகளையும் (0.8 X 3 = 2.4 மெகாவாட்) அவர் ஆய்வு செய்ததோடு, உள்ளூர் மக்களின் பிரதிநிதிகளுடனும் உரையாடினார்.

துல்ஹஸ்தி மின் நிலையத்தின் அணை வளாகத்தை அமைச்சர் நேற்று பார்வையிட்டார். மின்சார அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் எஸ் கே ஜி ரஹாதே, என்எச்பிசி தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் திரு ஏ கே சிங், ஜம்மு & காஷ்மீர் மின்சார மேம்பாட்டு துறையின் முதன்மை செயலாளர் ரோஹித் கன்சால் ஆகியோர் அமைச்சருடன் உடன் இருந்தனர்.

அமைச்சருக்கு மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்களால் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அணை வளாகத்தையும் மின் நிலையத்தின் செயல்பாட்டையும் அமைச்சர் ஆய்வு செய்தார். நிர்மல் சிங், பொது மேலாளர் (பொறுப்பு), துல்ஹஸ்தி மின் நிலையம், மின் நிலைய செயல்பாடு பற்றி அமைச்சருக்கு விரிவாக விளக்கினார்.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply