உத்தரப்பிரதேசத்தின் ராம்பூரில் 29-வது “ஹுனார் ஹாத்தை” மத்திய கல்வி, அமைச்சர் தர்மேந்திர பிரதான் தொடங்கி வைத்தார்.

உத்தரப்பிரதேசத்தின் ராம்பூரில் 29-வது “ஹுனார் ஹாத்தை” மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் மற்றும் கலாச்சார இணை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் முன்னிலையில்

மத்திய கல்வி, திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைதல் அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்று தொடங்கி வைத்தார்.

விழாவில் பேசிய தர்மேந்திர பிரதான், நம் நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும் திறமையான மக்கள் உள்ளனர் என்றார். அவர்களின் திறமைகளுக்கு சந்தை வாய்ப்புகளை வழங்க வேண்டிய அவசியம் உள்ளது என்றும் “ஹுனார் ஹாத்” கண்காட்சிகள் இந்த விஷயத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன என்றும் அவர் கூறினார்.

“ஹூனார் ஹாத்” அரசு மின் சந்தையிலும் (ஜிஇஎம்) கிடைக்கிறது, இதன் மூலம் கைவினைஞர்களின் உள்நாட்டு தயாரிப்புகளுக்கு பெரிய அளவிலான தேசிய மற்றும் சர்வதேச சந்தைகள் கிடைக்கும்.

“விஸ்வகர்மா” மற்றும் “ஹுனார் ஹாத்” போன்ற முன்முயற்சிகள் நாட்டின் ஒவ்வொரு கிராமத்திலும் திறமைகளுக்கு நம்பகமான தளத்தை வழங்கியுள்ளதாக தர்மேந்திர பிரதான் கூறினார். அரசின் புதிய கல்விக் கொள்கை, கல்வி மற்றும் திறன் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கிறது என்று அவர் கூறினார். கலைஞர்கள் மற்றும் கைவினைஞர்களின் குழந்தைகளுக்கு கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சியை வழங்க மத்திய கல்வி அமைச்சகம் மற்றும் சிறுபான்மை விவகார அமைச்சகம் இணைந்து செயல்படும்.

அர்ஜுன் ராம் மேக்வால் பேசுகையில், கைவினைஞர்களின் கைகளில் கலையையும் திறமையையும் கடவுள் கொடுத்தார் என்றும் “ஹூனார் ஹாத்” என்பது பிரதமர் நரேந்திர மோதியின் “தற்சார்பு இந்தியா” மற்றும் “உள்ளூர் தொழில்களுக்கு ஊக்கம்” பிரச்சாரத்தை வலுப்படுத்தும் மிக அழகான முயற்சியாகும் என்றும் கூறினார். ராம்பூரில் உள்ள “ஹுனார் ஹாத்” தற்சார்பு இந்தியா பிரச்சாரத்தை முன்னெடுத்துச் செல்வதில் ஒரு மைல்கல்லாக இருக்கும்.

விழாவில் உரையாற்றிய நக்வி, விடுதலையின் அம்ரித் மஹோத்சவத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்படும் 75 “ஹுனார் ஹாத்” மூலம் 7 ​​லட்சத்து 50 ஆயிரம் கைவினைஞர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடையோருக்கு வேலைவாய்ப்புகளை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply