அசாம் மாநிலத்தில் உள்ள திப்ரூகரில் சரக்கு முனையம், சுற்றுலா படகுக்குழாம் மற்றும் ஆற்றங்கரை வளர்ச்சித் திட்டங்களை மத்திய அமைச்சர் சர்பானந்த சேனாவால் ஆய்வு செய்தார்.

அசாம் மாநிலத்தில் உள்ள திப்ரூகரில் சரக்கு முனையம், சுற்றுலா படகுக்குழாம் மற்றும் ஆற்றங்கரை வளர்ச்சித் திட்டங்களை  கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர்  சர்பானந்த சேனாவால் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் திப்ரூகர்  முக்கிய பங்கு வகிக்கிறது.  இங்கு வளர்ச்சித் திட்டங்களை பார்வையிட்டு ஆய்வு செய்த மத்திய அமைச்சர் சர்பானந்த சோனோவால் கூறியதாவது:

இரண்டாவது தேசிய நீர்வழிப் போக்குவரத்து பிரம்பபுத்ரா மற்றும் 16வது தேசிய நீர்வழிப் போக்குவரத்து பராக்  ஆகியவற்றை மேம்படுத்த பிரதமர் நரேந்திர மோதி அளித்துள்ள வாய்ப்புகள், வங்கதேசத்துடனான இணைப்பை அதிகரிக்கின்றன மற்றும் உலகச் சந்தையை அடைவதற்கான வழியையும் வழங்குகிறது. அதனால் நாங்கள் பன்முனை போக்குவரத்துப் பூங்காங்களை அமைத்து, அசாம் மாநிலத்தின் பல பகுதிகளில் ஆற்று துறைமுகங்களை உருவாக்கி வருகிறோம். திப்ரூகரில் சரக்குப் போக்குவரத்து மற்றும் பயணிகள் போக்குவரத்துக்கான துறைமுகம் கட்டப்படும். போஜிபீல் பாலத்துக்கு அருகில் உள்ள பகுதியை மேம்படுத்த கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சகம், அசாம் அரசு, வடகிழக்கு ரயில்வே ஆகியவை இணைந்து செயல்படுகின்றன. பிரதமர் திரு நரேந்திர மோடியின் கிழக்கு கொள்கை, வடகிழக்கு இந்தியாவை ஒரு இணைப்பு மையமாக மாற்றியுள்ளது.

பிரதமரின் விரைவுசக்தி தேசிய பெருந்திட்டத்தின் கீழ், பிரம்மபுத்ரா ஆற்றில் சரக்குப் போக்குவரத்தை துரிதப்படுத்துவதற்கான ஒருங்கிணைந்தத் திட்டம் உருவாக்கப்படுகிறது. இது வேலை வாய்ப்பை அளிக்கும், உள்ளூர் பொருட்களுக்கு உலகளாவியச் சந்தை அணுகலை வழங்கும்.

இவ்வாறு மத்திய அமைச்சர் சர்பானந்த சோனோவால் கூறினார்.

திவாஹர்

Leave a Reply