ராஜஸ்தானில் வருமான வரித்துறை சோதனை!

The Income Tax Department carried out search and seizure operations in border districts of Rajasthan on 28.10.2021 covering 33 premises at different locations, where the groups are carrying on business of real estate, sand-mining and liquor trade.

During the course of the search, documentary evidences were found and seized indicating receipt of unaccounted cash as well as utilisation of the same towards purchase of land. Further, documentary evidence of cash sales of sand has been found and seized. The analysis of the same reveals that part of these cash sales have not been recorded in the books of accounts.

The search operation has resulted in seizure of unaccounted cash of Rs. 2.31 crore and unexplained jewellery of Rs. 2.48 crore.

The search action has led to the detection of total unaccounted income exceeding Rs.50 crore. Out of the above, the assessees have admitted unaccounted income exceeding Rs. 35 crore and offered to pay due taxes on the same.

Further investigations are in progress.

xxxxxxxx

ரியல் எஸ்டேட், மணல் குவாரி மற்றும் மது விற்பனையில் ஈடுபட்டுள்ள குழுமங்களுக்கு தொடர்புடைய, ராஜஸ்தான் மாநிலத்தின் எல்லையோர மாவட்டங்களில் உள்ள முப்பத்தி மூன்று இடங்களில் 2021 அக்டோபர் 28 அன்று தேடுதல் மற்றும் பறிமுதல் நடவடிக்கைகளை வருமான வரித்துறை மேற்கொண்டது.

தேடுதல் நடவடிக்கையின் போது, கணக்கில் காட்டப்படாத பணம் மற்றும் அதை பயன்படுத்தி வாங்கப்பட்ட நிலம் தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. பண பரிவர்த்தனை மூலம் மணல் விற்றதற்கான ஆதாரங்களும் கண்டறியப்பட்டன. பண பரிவர்த்தனைகள் குறித்து கணக்குப் புத்தகங்களில் பதிவேற்றப்படாததும் தெரியவந்தது.

ரூபாய் 2.31 கோடி கணக்கில் காட்டப்படாத பணம் மற்றும் ரூபாய் 2.48 கோடி மதிப்பிலான நகைகள் தேடுதல் நடவடிக்கையின் போது பறிமுதல் செய்யப்பட்டன.

ரூபாய் 50 கோடிக்கும் அதிகமான கணக்கில் காட்டப்படாத வருவாய் கண்டறியப்பட்ட நிலையில் ரூபாய் முப்பத்தி ஐந்து கோடிக்கும் அதிகமான பணம் கணக்கில் காட்டப்படவில்லை என்று ஒப்புக்கொண்ட குடும்பத்தினர் அதற்கான வரியை செலுத்தவும் முன்வந்தனர். மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

திவாஹர்

Leave a Reply