கனமழை எச்சரிக்கை!-அரசு மற்றும் அனைத்துக்கட்சித் தலைவர்கள் மேற்கொள்ள வேண்டிய போர்கால நடவடிக்கைகள்..!

tamilrain_fc-25

chennaiinf-38

அரசு மேற்கொள்ள வேண்டிய போர்கால நடவடிக்கைகள்..!

அரசிடமிருந்து மறுஉத்தரவு வரும் வரை பள்ளி, கல்லூரி உள்பட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்க உத்தரவிடுங்கள்.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களையும்; தாழ்வான இடங்களில் வசிக்கும் மக்கள் அனைவரையும் சிறிதும் தாமதிக்காமல் மேடான மற்றும் பாதுகாப்பான பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரி மற்றும் மாணவர் விடுதி கட்டிடங்களில் நோய்த் தொற்று பரவாத வண்ணம் பாதுகாப்பாக தங்க வையுங்கள். தங்கு தடையின்றி உணவு, உடை, குடிநீர் மற்றும் மருந்துகள் கிடைப்பதை உறுதி செய்யுங்கள்.

இதற்கான பணிகளில் ஆசிரியர்கள் உள்பட, கிராம உதவியாளர்கள் (தலையாரிகள்) முதல், தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் உயர் அதிகாரிகள் வரை அனைவரையும் சுழற்ச்சி முறையில் அவசர கால பணியில் ஈடுப்படுத்துங்கள். இதற்கு இணங்காத மற்றும் எதிர்ப்பு தெரிவிக்கும் அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளை சம்பளம் இல்லாத நீண்ட கால விடுமுறையில் வீட்டிற்கு அனுப்பி வையுங்கள். ஆபத்து காலத்தில் கூட மக்களுக்கு பணியாற்ற விரும்பாத நபர்கள், அரசு பணிகளில் நீடிப்பது இயற்கை சீற்றத்தைவிட அபாயகரமானது.

மீட்பு நிவாரணப் பணிகளில் காவல்துறை, தீயணைப்பு மீட்பு துறை மற்றும் பேரிடர் மீட்பு படையினருடன்; நீச்சல் பயிற்சி பெற்ற மீட்பு பணிகளில் அனுபவம் உள்ள துணிச்சலான நகர்புற மற்றும் கிராமப்புற இளைஞர்களையும் கட்டாயம் ஈடுப்படுத்துங்கள். அவசியம் ஏற்பட்டால் தயங்காமல் முப்படை வீரர்களின் உதவியை நாடுங்கள்.

அனைத்துக்கட்சித் தலைவர்கள் செய்ய வேண்டிய பணிகள்!

அனைத்துக்கட்சித் தலைவர்களுக்கும் மற்றும் அரசியல் பிரமுகர்களுக்கும் ஒரு அன்பான வேண்டுகோள்!-அரசியல் செய்வதற்கான தருணம் இதுவல்ல!- மக்களுக்கு உண்மையான சேவை செய்வதற்கு இயற்கை வழங்கியிருக்கும் ஒரு அரிய சந்தர்ப்பம். எனவே, கட்சி வேறுபாடுகள்; கொள்கை வேறுபாடுகள்; கோஷ்டி பூசல்கள்..!- இவற்றையெல்லாம் புறந்தள்ளிவிட்டு, இந்த மழை வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் மக்களை காப்பாற்றும் பணியில் ஈடுப்பட தங்கள் தொண்டர்களுக்கு உத்தரவிடுங்கள்.

ஏனென்றால், உண்மையான மக்கள் சேவைதான்; மகேசன் சேவை!- அது இப்போது அவசியம் தேவை.

Dr.துரை பெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : ullatchithagaval@gmail.com

Leave a Reply