A joint airlift exercise, ‘Op Hercules’ was undertaken by the Indian Air Force and Indian Army on 15 November 2021. The aim of this high intensity airlift was to strengthen the logistics supply in the Northern sector and to augment winter stocking in the operational areas.
The platforms utilised for the airlift were C-17, IL-76 and An-32 aircraft, which took off from one of the forward bases of Western Air Command. The effort was a real-time demonstration of the inherent heavy lift capability of the Indian Air Force, which has played a major role in ensuring the ability to quickly respond to any contingency during the past.
xxxxxxxxx
இந்திய விமானப்படை மற்றும் இந்திய ராணுவம் இணைந்து ‘ஆபரேஷன் ஹெர்குலஸ்’ என்னும் கூட்டு நடவடிக்கையை நவம்பர் 15-ந் தேதி மேற்கொண்டன. குளிர் காலத்தில் இருப்பு வைப்பதற்காக வடபகுதிக்கு அதிக அளவில் விரைவாக பொருட்கள் விநியோகத்தை வலுப்படுத்துவதே இதன் நோக்கமாகும்.
இந்த விநியோகத்திற்கு சி-17, ஐஎல்76, ஏஎன்-32, ரக விமானங்கள் மேற்கு பிராந்திய விமானப்படைத் தளத்திலிருந்து இதற்காக புறப்பட்டுச் செல்கின்றன. கடந்த காலங்களில் தளவாடங்கள் மற்றும் பொருட்களை விரைவாக ஏற்றிச் செல்வதில் முக்கியப் பங்கு வகிக்கும் இந்திய விமானப்படையின் பொருள் ஏற்றிச் செல்லும் திறனை வெளிகாட்டும் வகையில் இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.