கொல்கத்தா சியாமா பிரசாத் முகர்ஜி துறைமுகத்தின் ஹால்டியா கப்பல்துறை வளாகத்தில் மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிப்பாதைகள் துறை இணை அமைச்சர் சாந்தனு தாக்கூர் பல திட்டங்களை இன்று தொடங்கி வைத்தார். அவையாவன
மேம்படுத்தப்பட்ட வெள்ள நீர் அகற்றல் & சாலைகள் அகலப்படுத்துதல்
41000 சதுர மீட்டர் சரக்கு கையாளும் பகுதியை துறைமுகத்துடன் இணைத்தல்
துறைமுக விருந்தினர் மாளிகையை மேம்படுத்துதல் மற்றும் தோட்டத்தை அலங்கரித்தல்
துறைமுக மருத்துவமனையில் புதிய தீவிர சிகிச்சை பிரிவு & அவசர சிகிச்சை பிரிவு.
இந்நிகழ்ச்சியில் பேசிய திரு. தாக்கூர், இந்திய நீர்வழிப் பாதை அமைப்புகள் எந்த நாடும் ஈடு செய்ய முடியாத வேகத்தில் விரிவடைந்து வருகின்றன என்று கூறினார்.
துறைமுக தலைவர் வினித் குமார் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
–எம்.பிரபாகரன்