உயிரி எரிபொருள்களின் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக தேசிய கொள்கையை அரசு வெளியிட்டுள்ளது.

நாடாளுமன்றத்தின் மக்ககளவையில் கேள்வி ஒன்றுக்கு இன்று எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு இணை அமைச்சர் ராமேஸ்வர் தெலி கீழ்காணும் தகவல்களை அளித்தார்.

நாட்டில் உயிரி எரிபொருள்களின் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக தேசிய உயிரி எரிபொருள்கள் கொள்கை-2018-ஐ 4 ஜூன் 2018 அன்று அரசு வெளியிட்டது.

2030-ம் ஆண்டுக்குள் பெட்ரோலில் எத்தனாலை 20% கலப்பதையும், 2030-ம் ஆண்டுக்குள் டீசலில் 5% பயோடீசலைக் கலப்பதையும் தேசிய உயிரி எரிபொருள்கள் கொள்கை குறிக்கோளாகக் கருதுகிறது.

உயிரி எரிபொருள்களின் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் அரசு, ஆராய்ச்சி, ஊக்கத்தொகை உள்ளிட்ட திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது.

திவாஹர்

Leave a Reply