31-வது தேசிய எரிசக்தி பாதுகாப்பு விருதுகள் மற்றும் 1-வது தேசிய எரிசக்தி சிக்கன கண்டுபிடிப்பு விருதுகளை எரிசக்தி சிக்கன அமைப்பு அறிவித்துள்ளது.

ஆண்டுதோறும் டிசம்பர் 14-ந் தேதி தேசிய எரிசக்தி பாதுகாப்பு தினமாக கொண்டாடப்படுவதை முன்னிட்டு,   மத்திய எரிசக்தி அமைச்சகத்தின் வழிகாட்டுதலுடன் செயல்படும் எரிசக்தி சிக்கன அமைப்பு, தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்வேறு நிறுவனங்கள், தங்களது எரிசக்தி பயன்பாட்டைக் குறைத்திருப்பதை அங்கீகரித்து, ஊக்கப்படுத்தும் விதமாக , தேசிய எரிசக்தி பாதுகாப்பு விருதுகளை (தேசிய எரிசக்தி பாதுகாப்பு விருதுகளை (NECA)  அறிவித்துள்ளது.  இந்த ஆண்டு புதிதாக, தேசிய எரிசக்தி சிக்கன கண்டுபிடிப்பு விருதும் (NEEIA) ஏற்படுத்தப்பட்டுள்ளது.  

இந்த ஆண்டு,  “விடுதலைப் பெருவிழா” -வின் ஒரு பகுதியாக,  NECA மற்றும் NEEIA விருதுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  இந்த விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டோர்,  14 டிசம்பர், 2021 அன்று நடைபெற உள்ள தேசிய எரிசக்தி பாதுகாப்பு தினத்தன்று, முக்கியப் பிரமுகர்களால் விருது வழங்கி கவுரவிக்கப்படுவார்கள்.

திவாஹர்

Leave a Reply