இந்தியக் கடற்படையின் 22 ஆவது ஏவுகணை வாகன அணிக்குக் கொடி விருதினை குடியரசுத் தலைவர் வழங்கினார்.

The President of India, Shri Ram NathKovind, presented President’s Standard to the 22nd Missile Vessel Squadron of the Indian Navy in Mumbai, Maharashtra today (December 8, 2021).

Speaking on the occasion, the President congratulated all officers and sailors associated with the 22nd Missile Vessel Squadron for achieving this feat. He said that the presentation of the Standard is a testimony to the exceptional service rendered by officers and sailors, past and present, of this squadron to our nation.

The President noted that the ships of this squadron have been deployed for a multitude of operations. They are securing our maritime borders through mission based deployments. They are also undertaking diplomatic missions in the Gulf of Oman and Persian Gulf and anti-piracy operations.

President said that India is a maritime nation and the Indian Navy has a huge role to play in furtherance of our foreign policy and in protecting our national interests and commercial aspirations. It is a matter of great satisfaction that the Indian Navy has been successfully safeguarding our extensive maritime interests with resolve and tenacity. He said that a large share of global maritime trade transits through the Indian Ocean Region. Therefore, maintaining peace and tranquility in this region is of paramount importance, not only for us, but also for the entire global community. Today, as one of the largest navies in the world, the Indian Navy is looked upon by our maritime neighbours as a preferred security partner in the Indian Ocean region, he added.

The President said that the emerging geopolitical challenges in the Indo-Pacific region present India with an opportunity to play a pivotal role. He noted that as one of the leading navies of this region, the Indian Navy has invested significant effort in meeting all regional commitments and furthering our engagements with partners in the Indo-Pacific

xxxxxxxxxx

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இன்று (டிசம்பர் 8, 2021) இந்தியக் கடற்படையின் 22-ஆவது ஏவுகணை வாகன அணிக்கு குடியரசுத் தலைவரின் கொடி விருதினைக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர் இந்த சாதனையை அடைந்ததற்காக 22 ஆவது ஏவுகணை வாகன அணியோடு இணைந்துள்ள அனைத்து அதிகாரிகள் மற்றும் மாலுமிகளுக்கு வாழ்த்துத் தெரிவித்தார். இந்த அணி நமது நாட்டிற்குக் கடந்த காலத்திலும், நிகழ் காலத்திலும் இதன் அதிகாரிகளாலும், மாலுமிகளாலும் செய்யப்பட்ட மிகச்சிறந்த சேவைக்கான சான்றாக இந்த விருதளிப்பு இருப்பதாக அவர் கூறினார்.

இந்த அணியின் கப்பல்கள், பலவகையான நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதைக் குடியரசுத் தலைவர் சுட்டிக்காட்டினார். முக்கியமான பணிக்காக ஈடுபடுத்துதல் மூலம் இவை நமது கடற்பகுதியின் எல்லைகளைப் பாதுகாத்துள்ளன. மேலும், ஓமன் வளைகுடா, பாரசீக வளைகுடா பகுதிகளில் தூதரக நிலையிலான இயக்கங்களிலும், கடற்கொள்ளைக்கு எதிரான நடவடிக்கைகளிலும் இவை ஈடுபட்டுள்ளன என்று அவர் கூறினார்.

இந்தியா கடல்பகுதி மிகுந்த நாடு என்று கூறிய குடியரசுத் தலைவர், இந்தியக் கடற்படை நமது வெளிநாட்டுக் கொள்கை மற்றும் தேசநலன்கள் பாதுகாப்பு, வர்த்தக முன்னேற்றம் ஆகியவற்றில் மிகப்பெரிய பங்கு வகிப்பதாக குறிப்பிட்டார்.

உலகளாவிய கடல் வாணிபம், இந்தியப் பெருங்கடல் பகுதி மூலமாக பெருமளவு நடைபெறுவதாக அவர் கூறினார். எனவே, இந்தப் பகுதியில் அமைதியை பராமரிப்பது நமக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த உலக சமூகத்திற்கும் மிக முக்கியமானதாகும். உலகின் மிகப்பெரிய கடற்படைகளில் ஒன்றான இந்திய கடற்படையை இந்திய பெருங்கடல் பகுதியில் பாதுகாப்பு கூட்டாளியாக அண்டை நாடுகளும் எதிர்பார்க்கின்றன என்று அவர் தெரிவித்தார்.

திவாஹர்

Leave a Reply