கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை மற்றும் கர்நாடக ஆளுநர் தாவர் சந்த் கெலாட் ஆகிய இருவரையும் கடலோர காவல்படையின் மேற்கு மண்டல இன்ஸ்பெக்டர் ஜெனரல் எஸ்.பரமேஷ் இன்று தனித்தனியே நேரில் சந்தித்து பேசினார்.
இச்சந்திப்பின்போது, சமீப காலங்களில் ஏற்பட்ட புயல், கனமழை மற்றும் வெள்ளப் பெருக்கில் இருந்து மனித உயிர்களைக் காப்பாற்றும் முயற்சியில், கடலோர காவல்படையினர் சிறப்பான முறையில் உயிரை பணையம் வைத்து பணியாற்றியுள்ளனர்.
இதனால் நீரின் மூலம் ஏற்படும் உயிரிழப்புகள் தடுக்கப்பட்டுள்ளன. இதற்கு கர்நாடக மாநில அரசு கடலோர காவல் படையினருக்கு ஒத்துழைப்பு அளித்துள்ளது. இது மேலும் தொடர வேண்டும்.
இவ்வாறு கடலோர காவல்படையின் மேற்கு மண்டல இன்ஸ்பெக்டர் ஜெனரல் எஸ்.பரமேஷ் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை மற்றும் ஆளுநர் தாவர் சந்த் கெலாட் ஆகியோரிடம் பகிர்ந்து கொண்டார்.
–Dr.துரை பெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : editorutlmedia@gmail.com