நக்சல் நடவடிக்கைகளை எதிர்கொள்வதற்கு வழங்கப்படும் உதவி!

நாடாளுமன்றத்தின் மக்களவையில் உறுப்பினரின் கேள்விக்கு இன்று எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் கீழ்காணும் தகவல்களை அளித்தார்.

பாதுகாப்பு தொடர்பான செலவினங்கள் திட்டத்தின் கீழ் இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் ஏப்ரல் 2018-ல் 126-லிருந்து 90 ஆகவும், ஜூலை 2021-ல் 70 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளன.

ஆந்திரப் பிரதேசம், பிகார், சத்திஸ்கர், ஜார்கண்ட், கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா, தெலங்கானா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் உள்ள 70 மாவட்டங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ஏழாவது அட்டவணையின்படி, ‘காவல்துறை மற்றும் பொது ஒழுங்கு’ ஆகியவை மாநில அரசுகளிடம் உள்ளன. இருப்பினும், இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் முயற்சிகளுக்கு இந்திய அரசு துணையாக இருந்து வருகிறது.

இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு மத்திய ஆயுதப் படைகளின் பட்டாலியன்கள், மாநிலங்களில் உள்ள படைகளுக்கு சிறப்புப் பயிற்சிகள், ஹெலிகாப்டர்கள், மாநிலக் காவல் படைகளை நவீனமயமாக்குவதற்கான நிதி, உபகரணங்கள் மற்றும் ஆயுதங்கள், உளவுத்துறைப் பகிர்வு ஆகியவற்றின் மூலம் மத்திய அரசு உதவுகிறது.

இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் படைகளின் திறனை வளர்ப்பதற்கான நிதி வழங்கப்படுவதோடு ,அவற்றின் உள்கட்டமைப்பு, காவல் நிலையங்களின் வலுவான கட்டுமானம் ஆகியவற்றுக்கும் உதவப்படுகிறது.

சிறப்பு உள்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் மாநில காவல் படைகளை வலுப்படுத்துவதற்கும், 250 வலுவூட்டப்பட்ட காவல் நிலையங்களைக் கட்டுவதற்கும் 2017-29-ல் ரூ 991 கோடி ரூபாய் அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த மூன்று நிதியாண்டுகளில் இடதுசாரி தீவிரவாதம் பாதிக்கப்பட்ட 11 மாநிலங்களுக்கு பாதுகாப்பு தொடர்பான செலவு திட்டத்தின் கீழ் 871.75 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.

எம்.பிரபாகரன்

Leave a Reply