விடுதலையின் அமிர்த மகோத்ஸவத்தின் ஒரு பகுதியாக டிசம்பர் 20 முதல் 25 வரை நல்லாட்சி வாரத்தை பணியாளர், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதிய அமைச்சகத்தின் நிர்வாக சீர்திருத்தம் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்பு துறை கொண்டாடுகிறது.
வெளியுறவு விவகாரங்கள் அமைச்சகம், தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக ஊக்குவிப்பு துறை, பணியாளர் மற்றும் பயிற்சி துறை, ஒய்வூதியம் மற்றும் ஓய்வூதியர் நலத்துறை மற்றும் பஞ்சாயத்து ராஜ் மற்றும் ஊரக வளர்ச்சி அமைச்சகம் ஆகியவற்றோடு இணைந்து நல்லாட்சி வாரத்தை நிர்வாக சீர்திருத்தம் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்பு துறை கொண்டாடுகிறது.
புதுதில்லியில் உள்ள டாக்டர். அம்பேத்கர் சர்வதேச மையத்தில் அமைந்துள்ள பீம் அரங்கில் 2021 டிசம்பர் 20 அன்று நடைபெறவுள்ள நல்லாட்சி வார தொடக்க விழாவில் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு); புவி அறிவியல் இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு); பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைகள், ஓய்வூதியம், அணு சக்தி மற்றும் விண்வெளித்துறை இணை அமைச்சருமான டாக்டர். ஜிதேந்திர சிங் முதன்மை விருந்தினராக கலந்து கொள்கிறார்.
நல்லாட்சி நடைமுறைகள் பற்றிய கண்காட்சியை அமைச்சர் தொடங்கி வைக்கிறார். நல்லாட்சி வார இணையதளத்தை டாக்டர். ஜிதேந்திர சிங் தொடங்கி வைப்பதோடு, நிர்வாக சீர்திருத்தம் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்பு துறையின் 2 ஆண்டு சாதனைகள் குறித்த கையேட்டை வெளியிடுவார். “பிரஷாசன் கோன் கி அவுர்” குறித்த திரைப்படம் இந்த விழாவில் திரையிடப்படும்.
நல்லாட்சி வாரத்தின் வெற்றிக்கு தமது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, “விடுதலையின் அமிர்த காலத்தில், வெளிப்படையான அமைப்பு, திறமையான செயல்முறை மற்றும் சுமூகமான நிர்வாகத்தின் மூலம் முழுமையான வளர்ச்சியை உருவாக்க நாம் வேகமாக முன்னேறி வருகிறோம்.
இந்தச் சூழலில் நல்லாட்சி வாரத்தின் கருப்பொருளான – பிரஷாசன் காவ்ன் கி அவுர் – மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. “மக்களுக்கே முன்னுரிமை” அணுகல் மூலம் வழிநடத்தப்படும் மக்கள் சார்ந்த மற்றும் செயல்திறன் மிக்க நிர்வாகத்தை வலுப்படுத்த எங்கள் அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது,” என்று தமது வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.
–திவாஹர்