35 ஐஆர்எஸ் அதிகாரிகளின் பயிற்சி நிறைவு விழாவுக்கு மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்தின் தலைவர் விவேக் ஜோஹ்ரி தலைமை வகித்தார்.

ஐஆர்எஸ் (சி&ஐடி) அதிகாரிகளின் 71-வது குழுவின் பயிற்சி நிறைவு விழா பரிதாபாத்தில் உள்ள தேசிய சுங்கம், மறைமுக வரிகள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு தேசிய அகாடமியில் அணிவகுப்போடு இன்று நிறைவுற்றது.

10 பெண் அலுவலர்கள் உள்ளிட்ட 35 அலுவலர்கள் இந்தப் பிரிவில் பயிற்சி பெற்றனர். சுதந்திரத்திற்குப் பின்னர் மறைமுக வரி முறையில் செய்யப்பட்ட மிகவும் முக்கியத்துவம் மிக்க சீர்திருத்தமான சரக்கு மற்றும் சேவை வரிகள் (ஜிஎஸ்டி) துறையில் இவர்கள் பணியாற்றுவார்கள்.

பயிற்சி நிறைவு விழாவுக்கு மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்தின் தலைவர் திரு விவேக் ஜோஹ்ரி தலைமை வகித்ததோடு அணிவகுப்பு மரியாதையையும்ஏற்றுக்கொண்டார்

நிறைவு விழாவில் உரையாற்றிய அவர், பயிற்சியின் முடிவாக இது இருக்கலாமே தவிர கற்றலின் முடிவாக இருக்கக் கூடாது என்று அதிகாரிகளிடம் கூறினார். துணிச்சலான முடிவுகளை எடுக்குமாறும், சவால்களை எதிர்கொள்ளும் விதத்தில் தரவு சார்ந்த அமைப்பாக இத்துறையை மாற்றுவதற்கான தேவை குறித்தும் அவர் அதிகாரிகளிடம் கூறினார்.

பயிற்சியை சிறப்பாக நிறைவு செய்த அலுவலர்களுக்கு பாராட்டு தெரிவித்த அவர், அவர்களது குடும்பத்தினரின் பங்களிப்பையும் குறிப்பிட்டார். பயிற்சியின் பல்வேறு பிரிவுகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டன.

எம்.பிரபாகரன்

Leave a Reply