Raksha Rajya Mantri and Minister of State for Tourism Shri Ajay Bhatt paid tribute to fallen heroes at Kumaon Regimental Centre (KRC) War Memorial in Ranikhet, Uttarakhand on December 27, 2021. He also honoured the veer naris as a mark of respect and gratitude. They were felicitated by Smt Pushpa Bhatt, wife of Shri Ajay Bhatt.
The couple also visited KRC Woollens, a rehabilitation project run by veer naris of KRC since 1976. Raksha Rajya Mantri is on official tour to Uttarakhand as part of Vijay Sankalp Yatra that commenced from December 26, 2021.
Shri Ajay Bhatt said, the supreme sacrifices of the families of the soldiers always helped in winning wars and ensured safety of the Nation. He added that the whole nation will always remain indebted for the supreme sacrifices made by our brave soldiers and Government of Prime Minister Shri Narendra Modi stands firmly with their families.
Kumaon Regiment Centre Deputy Commandant Colonel Sanjay Kumar Yadav was also present during the wreath laying ceremony at KRC War Memorial, Ranikhet.
xxxxxxxx
உத்தராகண்ட், ராணிகேட் பகுதியில் உள்ள குமான் படைப்பிரிவு மையம் (கேஆர்சி) போர் நினைவிடத்தில் உயிர் நீத்த வீரர்களுக்கு பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் அஜய்பட் புகழஞ்சலி செலுத்தினார்.
விஜய் சங்கல்ப் யாத்ராவின் ஒரு பகுதியாக பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் அஜய்பட் உத்தரகாண்டிற்கு நேற்று அரசு முறைப் பயணம் மேற்கொண்டார். ராணிகேட் பகுதியில் உள்ள போர்நினைவிடத்தில் அவர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அப்போது கேஆர்சி மையத்தின் துணை கமாண்டன்ட் கர்னல் சஞ்சய் குமார் யாதவ் உடனிருந்தார்.
உயிர் நீத்த வீரர்களின் மனைவிகளுக்கு மரியாதை மற்றும் நன்றி செலுத்தும் விதமாக அவர்களை அமைச்சர் கௌரவித்தார். அஜய்பட்டின் மனைவி புஷ்பாபட்டும் அவர்களை பாராட்டினார்.
கடந்த 1976 –ம் ஆண்டில் இருந்து கேஆர்சி மையத்தில், உயிர் நீத்த வீரர்களின் மனைவிகள் நடத்தும் கேஆர்சி கம்பளி என்ற மறுவாழ்வு திட்டத்தையும் மத்திய அமைச்சர் பார்வையிட்டார். அதன் பின் திரு அஜய்பட் கூறுகையில், வீரர்களின் குடும்பங்களின் உன்னத தியாகங்கள், போரில் வெற்றி கொள்ளவும் எப்போதும் உதவியுள்ளன மற்றும் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்துள்ளன. தமது வீரர்கள் செய்த உன்னத தியாகங்களுக்கு ஒட்டு மொத்த நாடும் எப்போதும் கடன்பட்டுள்ளது மற்றும் அவர்கள் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி தலைமையிலான அரசு எப்போதும் துணை நிற்கிறது.
–திவாஹர்