புதுக்கோட்டை, மாவட்டம், நார்த்தாமலை அருகே உள்ள மத்திய தொழிலக பாதுகாப்புப் படை (Central Industrial Security Force -CISF) வீரர்கள் நடத்திய துப்பாக்கிச் சூடு பயிற்சியின் போது குறி தவறி சென்ற தோட்டா ஒன்று; துப்பாக்கிச் சுடும் பயிற்சி தளத்திலிருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் சீறி பாய்ந்து; நார்த்தாமலை பகுதியில் தனது தாத்தா, பாட்டி வீட்டிற்கு விருந்தாளியாக வந்திருந்த 11 வயது சிறுவன் புகழேந்தி என்பவரின் தலையில் பாய்ந்தது.
உயிருக்கு ஆபத்தான நிலையில் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்து வந்த நார்த்தாமலை சிறுவன் புகழேந்தி நேற்று (03.01.2022) உயிரிழந்தார்.
இந்நிலையில், தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ.10 இலட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
மத்திய அரசின் கவனத்திற்கு:
துப்பாக்கி குண்டு துளைத்து உயிரிழந்த சிறுவன் புகழேந்தி, துப்பாக்கி சுடும் பயிற்சி தளப் பகுதியில் விளையாடவோ, நடமாடவோ இல்லை. அவன் அவனது தாத்தா, பாட்டி வீட்டில் உணவருந்திக் கொண்டு இருக்கும்போது இந்த துயர சம்பவம் நடந்துள்ளது. பயிற்சியில் ஈடுபட்டிருந்த படைவீரரின் கவனக் குறைவு தான் இச்சம்பவத்திற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
எனவே, தமிழ்நாடு அரசு வழங்கியுள்ள ரூ. 10 லட்சம் நிவாரண உதவித்தொகை போதுமானது அல்ல. ஆகையால், உயிரிழந்த சிறுவனின் பெற்றோர்கள் மற்றும் அவர் குடும்பத்தாரின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, மத்திய அரசின் சார்பில் அச்சிறுவனின் குடும்பத்திற்கு ரூபாய் ஒரு கோடி நிதி உதவியும், தகுதியின் அடிப்படையில் குடும்பத்தில் ஒருவருக்கு மத்திய அரசு பணியும் வழங்க பிரதமர் நரேந்திர மோதி உத்தரவிட வேண்டும்.
மேலும், எதிர்காலத்தில் இதுப்போன்ற ஒரு துயர சம்பவம் நடைபெறாமல் முற்றிலும் தடுப்பதற்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை மத்திய உள்துறை அமைச்சகம் உடனே போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும்.
–Dr.துரை பெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : editorutlmedia@gmail.com
இது தொடர்பான முந்தைய செய்திகளுக்கு கீழ்காணும் இணைப்பை “கிளிக்” செய்யவும்.