கொல்கத்தாவில் சித்தரஞ்சன் தேசிய புற்றுநோய் மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் (சிஎன்சிஐ) இரண்டாவது வளாகத்தைப் பிரதமர் தொடங்கி வைத்தார்.

Prime Minister Shri Narendra Modi inaugurated the second campus of Chittaranjan National Cancer Institute in Kolkata today via video conference. The Chief Minister of West Bengal Ms Mamata Banerjee and Union Ministers Dr Mansukh Mandaviya, Dr Subhas Sarkar, Shri Shantanu Thakur, Shri John Barla and Shri Nisith Pramanik were among those present on the occasion.

Addressing the gathering, the Prime Minister said That the new campus will go a long way in providing affordable and state of the art care to the people of West Bengal especially to the poor and middle class families. “In the journey of the pledge to make best medical care available to each and every citizen of the country, we have taken another strong step”, said the Prime Minister.

The Prime Minister mentioned that the country started the year with vaccination for children in the age group of 15 to 18 years. At the same time, India is also achieving the historic milestone of 150 crore – 1.5 billion vaccine doses, in the first week of the first month of the year itself. 150 crore doses in less than one year is a significant achievement and symbol of the will power of the country. It denotes the country’s new confidence, Aatmnirbharta and pride, he said.  As cases are rising due to the omicron variant, this shield of 150 crore vaccines doses becomes all the more important,  the Prime Minister said.

The Prime Minister noted that today, more than 90 percent of India’s adult population has received a single dose of the vaccine. Within just 5 days, more than 1.5 crore children have also been given the dose of the vaccine. He dedicated this achievement to the whole country and every government. He especially thanked the scientists of the country, the vaccine manufacturers and the people in the health sector for this achievement.

The Prime Minister said so far, about 11 crore doses of corona vaccine have been provided free of cost to West Bengal by the government. More than one and a half thousand ventilators, more than 9 thousand new oxygen cylinders have also been provided to Bengal. 49 PSA new oxygen plants have also started functioning in the state, the Prime Minister informed.

The Prime Minister said that in order to transform the health sector of the country, mission mode campaigns for Preventive Healthcare, Affordable Healthcare, Supply Side intervention are being accelerated. Yoga, Ayurveda, Fit India Movement, Universal Immunisation are strengthening the Preventive Healthcare. Similarly, Swachh Bharat Mission and Har Ghar Jal schemes are contributing to better health outcomes.

The Prime Minister remarked on the fear that cancer causes in the poor and middle class due to the financial implications. To get the poor out of the vicious circle that the disease causes, the country is taking continuous steps for cheap and accessible treatment. The prices of medicines needed for the treatment of cancer have come down significantly in the last few years, he said. More than 8 thousand Jan Aushadhi Kendras are providing medicines and surgicals at very affordable rates. More than 50 cancer drugs are available at much lower cost in these stores.

The Prime Minister said that the government is sensitive to the needs of the patients and price regulation of more than 500 medicines is saving more than 3000 crore rupees annually. Heart patients are saving more than 4500 crore every year due to regulated prices of the coronary stents, reduced costs of knee implants are helping the senior citizens by saving their 1500 crore rupees every year. 12 lakh poor patients have received free dialysis facilities under the  Prime Minister National Dialysis Programme,  the Prime Minister informed.

The Prime Minister said today Ayushman Bharat scheme is becoming a global benchmark in terms of affordable and inclusive healthcare. Under PM-JAY, more than 2 crore 60 lakh patients have received  free treatment in hospitals across the country. Estimates say that in the absence of the scheme, patients would have ended up spending 50 to 60 thousand crore rupees. More than 17 lakh cancer patients also benefited under Ayushman Bharat scheme.The scheme is also promoting early detection and early treatment of the serious diseases through regular screening of diseases like cancer, diabetes and hyper-tension. Health and wellness centres that are coming up are helping in this campaign. More than 5 thousand such centres have been created in West Bengal also. More than 15 crore people have been screened for oral, cervical and breast cancer  in the country, the Prime Minister informed.

The Prime Minister said that till the year 2014, the number of undergraduate and postgraduate medical seats in the country was around 90,000. In the last 7 years, 60,000 new seats have been added to them. In 2014, we used to have only 6 AIIMS and today the country is moving towards a strong network of 22 AIIMS. Work is going on to ensure at least one medical college in every district of India. Cancer care infrastructure will get a boost by 19 state cancer institutes, 20 tertiary care cancer institutes have been sanctioned and work is on for more than 30 institutes. Similarly, Ayushman Bharat Digital Health Mission and Ayushman Bharat Infrastructure Mission will give the country’s health sector a modern form, he added.

The Prime Minister concluded by reiterating his appeal to take every precaution in the fight against Corona.

The second campus of CNCI has been built in line with the Prime Minister’s vision to expand and upgrade the health facilities in all parts of the country. CNCI was facing a heavy load of cancer patients and a need for expansion was being felt for sometime. This need will be fulfilled through the second campus.

The second campus of CNCI has been built at a cost of over Rs 540 crore, out of which around Rs 400 crores have been provided by the Union government and rest by the West Bengal government, in the ratio of 75:25. The campus is a 460 bedded comprehensive cancer centre unit with cutting edge infrastructure for cancer diagnosis, staging, treatment and care. The campus is equipped with modern facilities like Nuclear Medicine (PET), 3.0 Tesla MRI, 128 slice CT scanner, Radionuclide therapy unit, endoscopy suite, modern brachytherapy units etc. The campus will also work as an advanced cancer research facility and will provide comprehensive care to cancer patients  especially those from Eastern and North-Eastern parts of the country.

xxxxxxxxx

கொல்கத்தாவில் சித்தரஞ்சன் தேசிய புற்றுநோய் மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் (சிஎன்சிஐ) இரண்டாவது வளாகத்தைப் பிரதமர் நரேந்திர மோதி இன்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.  இந்த நிகழ்ச்சியில் மேற்கு வங்க முதலமைச்சர் செல்வி மம்தா பானர்ஜி, மத்திய அமைச்சர்கள் டாக்டர் மன்சுக் மாண்டவியா, டாக்டர் சுபாஷ் சர்க்கார், திரு சந்தானு தாக்கூர், திரு ஜான் பிர்லா, திரு நிதிஷ் பிரமாணிக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் திரண்டிருந்தோரிடையே உரையாற்றிய பிரதமர், மேற்குவங்க மக்கள் குறிப்பாக ஏழைகள் மற்றும் நடுத்தர குடும்பங்கள், கட்டுப்படியான மற்றும் நவீன சிகிச்சையை இந்த புதிய வளாகம் வழங்கும் என்றார். “நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் மிகச் சிறந்த மருத்துவ வசதியைக் கிடைக்கச் செய்வது என்ற உறுதிமொழியின் பயணத்தில் நாங்கள் மற்றொரு வலுவான அடியை எடுத்து வைத்திருக்கிறோம்” என்று பிரதமர் கூறினார்.

15 முதல் 18 வயதுக்கு உட்பட்ட இளையோருக்கு தடுப்பூசி  செலுத்துவதுடன் இந்த ஆண்டினை நாடு தொடங்கியிருக்கிறது என்று பிரதமர் குறிப்பிட்டார். அதே சமயம், இந்த ஆண்டின் முதலாவது மாதம், முதலாவது வாரத்தில் 150 கோடி- 1.5 பில்லியன் தடுப்பூசி டோஸ்கள் செலுத்தி வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனையை இந்தியா படைத்துள்ளது. ஓராண்டுக்கும் குறைவான காலத்தில் 150 கோடி டோஸ்கள் என்பது குறிப்பிடத்தக்க சாதனை மற்றும் நாட்டின் புதிய மனவுறுதிக்கான அடையாளமாகும். நாட்டின் புதிய நம்பிக்கை, தற்சார்பு இந்தியா, பெருமிதம் ஆகியவற்றையும் இது குறிப்பதாக  அவர் கூறினார். உருமாறிய ஒமிக்ரான் காரணமாக நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், 150 கோடி தடுப்பூசி டோஸ்கள் கேடயமாக இருப்பது மிகவும் முக்கியமானது என்று பிரதமர் கூறினார்.

இந்தியாவில் தடுப்பூசி செலுத்த தகுதி வாய்ந்த மக்கள் தொகையில், 90 சதவீதத்திற்கும் அதிகமானோர் ஒரு டோஸ் தடுப்பூசியை செலுத்திக் கொண்டிருப்பதாக பிரதமர் இன்று குறிப்பிட்டார். 5 நாட்களுக்குள் 1.5 கோடிக்கும் அதிகமான சிறார்களும் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர்.  இந்த சாதனையை ஒட்டுமொத்த தேசத்திற்கும் அனைத்து அரசுக்கும் அவர் அர்ப்பணித்தார்.  இந்த சாதனைக்கு நாட்டின் விஞ்ஞானிகளுக்கும் தடுப்பூசி தயாரிப்பாளர்களுக்கும், சுகாதாரத்துறையில் உள்ளவர்களுக்கும் அவர் சிறப்பான நன்றியைத் தெரிவித்தார்.

மத்திய அரசால் மேற்கு வங்கத்திற்கு இதுவரை கட்டணமில்லாமல் 11 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டிருப்பதாகப்  பிரதமர் கூறினார். ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமான சுவாசக் கருவிகளும், 9 ஆயிரத்துக்கும் அதிகமான புதிய ஆக்சிஜன் சிலிண்டர்களும் வங்கத்திற்கு வழங்கப்பட்டுள்ளன. இம்மாநிலத்தில் 49 புதிய பிஎஸ்ஏ ஆக்சிஜன் தொழிற்கூடங்களும், தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன என்று பிரதமர் தெரிவித்தார்.

நாட்டின் சுகாதாரத்துறையில் மாற்றம் கொண்டுவர முன்கூட்டியே நோய் தடுக்கும் சுகாதாரக் கவனிப்பு, குறைந்த செலவில் சுகாதார கவனிப்பு, விநியோக முறையில் தலையீடு ஆகியவை இயக்கங்களாக விரைவுப்படுத்தப்பட்டுள்ளன.  முன்கூட்டியே நோய் தடுக்கும் சுகாதார கவனிப்பை  யோகா, ஆயுர்வேதம், உடல் தகுதி இயக்கம், அனைவருக்கும் தடுப்பூசி ஆகியவை வலுப்படுத்தும்.  அதே போல், தூய்மை இந்தியா இயக்கம், வீட்டுக்கு வீடு தண்ணீர் திட்டங்கள், சிறந்த சுகாதாரப் பயன்களுக்குப் பங்களிப்பு செய்கின்றன.

பொருளாதார தாக்கங்கள் காரணமாக ஏழைகளுக்கும் நடுத்தர வகுப்பினருக்கும் புற்றுநோய்  ஏற்படுகிறது என்ற அச்சம் பற்றி பிரதமர் குறிப்பிட்டார். இந்த நோய் ஏற்படும் ஏழைகளை அந்த விஷச் சூழலிலிருந்து வெளியேவர செலவு குறைந்த, எளிதில் கிடைக்கக் கூடிய சிகிச்சைக்கு, நாடு தொடர்ச்சியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் புற்றுநோய் சிகிச்சைக்குத் தேவையான மருந்துகளின் விலை கணிசமான அளவு குறைந்துள்ளது என்று அவர் கூறினார்.  8 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் மருந்தக மையங்கள் மிகவும் குறைந்த விலையில் மருந்துகளும், மருத்துவ உபகரணங்களும் வழங்கப்படுகின்றன. இந்த மையங்களில் மிகவும் குறைந்த செலவில் 50க்கும் அதிகமான புற்றுநோய் மருந்துகள் கிடைக்கின்றன.

நோயாளிகளின் தேவைகளை உணர்ந்துள்ள அரசு 500க்கும் அதிகமான மருந்துகளின் விலையை முறைப்படுத்தியதால் ஆண்டுக்கு 3,000 கோடி ரூபாய்க்கும் மேல் சேமிக்கப்பட்டிருப்பதாகப் பிரதமர் கூறினார். இருதய நோயாளிகளுக்கான ரத்தநாள செயற்கை இணைப்புக் குழாய்களின் (ஸ்டென்ட்) விலை முறைப்படுத்தப்பட்டிருப்பதன் காரணமாக ஒவ்வொரு ஆண்டும், 4,500 கோடி ரூபாய்க்கும் மேல் சேமிக்கப்படுகிறது. மூத்த குடிமக்களுக்கு முழங்கால் மூட்டு, மாற்று அறுவை சிகிச்சைக்கான செலவு குறைக்கப்பட்டதால், ஒவ்வொரு ஆண்டும் 1,500 கோடி ரூபாய் சேமிக்கப்படுகிறது. பிரதமரின் தேசிய டயாலிசிஸ் திட்டத்தின் கீழ் 12 லட்சம் ஏழை நோயாளிகள் கட்டணமின்றி  டயாலிசிஸ் செய்து கொள்கின்றனர் என்று பிரதமர் தெரிவித்தார்.

கட்டுப்படியான மற்றும் அனைவரையும் உட்படுத்திய சுகாதார கவனிப்பில் ஆயுஷ் மான் பாரத் திட்டம் உலகளாவிய அடையாளமாக மாறியுள்ளது. பிரதமரின் மக்கள் மருந்துவ திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் 2 கோடியே 60 லட்சம் நோயாளிகள் கட்டணமின்றி சிகிச்சை பெற்றுள்ளனர்.  இந்தத் திட்டம் இல்லாமல் போயிருந்தால் 50 முதல் 60 ஆயிரம் கோடி ரூபாய் வரை நோயாளிகள் செலவு செய்திருப்பார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் 17 லட்சத்திற்கும் அதிகமான புற்றுநோயாளிகள்  பயனடைந்துள்ளனர். புற்றுநோய், நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம் போன்ற நோய்களுக்கு தொடர்ச்சியாக பரிசோதனை செய்வதன் மூலம் கடுமையான நோய்களை முன்கூட்டியே கண்டறிந்து முன்கூட்டியே சிகிச்சை அளிப்பதையும் இந்தத் திட்டம் மேம்படுத்துகிறது.  இந்த இயக்கத்தில் சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு மையங்கள் உதவி செய்து வருகின்றன. 5 ஆயிரத்திற்கும் அதிகமாக இத்தகைய மையங்கள் மேற்குவங்கத்திலும் அமைக்கப்பட்டுள்ளன. நாட்டில் 15 கோடிக்கும் அதிகமானோர் வாய், கருப்பை,  மார்பக புற்றுநோய்க்காக பரிசோதிக்கப்பட்டுள்ளனர் என்று பிரதமர் கூறினார்.

2014-ஆம் ஆண்டு வரை  நாட்டில் இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ இடங்களின் எண்ணிக்கை 90,000 அளவுக்குள் இருந்தன என்று பிரதமர் கூறினார். கடந்த 7 ஆண்டுகளில் இவற்றுடன் 60,000 புதிய இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. 2014-ல்  ஆறு  எய்ம்ஸ் மட்டுமே நாம் பெற்றிருந்தோம். இன்று நாடு வலுவான வலைப்பின்னலுடன் 22 எய்ம்ஸை நோக்கி முன்னேறுகிறது இந்தியாவின்  ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது ஒரு மருத்துவக் கல்லூரியையாவது உறுதி செய்ய பணிகள் நடைபெறுகின்றன.  19 மாநில புற்றுநோய் மருத்துவ ஆராய்ச்சிக் கழகங்கள் மற்றும் 20 மூன்றாம் நிலை கவனிப்புக்கான புற்றுநோய் மருத்துவ ஆராய்ச்சிக் கழகங்களுக்கு ஒப்புதல் வழங்கியிருப்பதன் மூலம் புற்றுநோய் கவனிப்பு அடிப்படைக் கட்டமைப்பு மேம்பாடு பெற்றுள்ளது. 30-க்கும் அதிகமான கல்விக் கழகங்களின் பணி நடைபெற்று வருகிறது. அதே போல் ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் சுகாதார இயக்கமும், ஆயுஷ்மான் பாரத், அடிப்படைக் கட்டமைப்பு இயக்கமும், நாட்டின் சுகாதாரத்துறைக்கு நவீன வடிவத்தை வழங்கும் என்று அவர் கூறினார்.

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் அனைவரும் முன்னெச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என்ற தமது வேண்டுகோளை வலியுறுத்தி பிரதமர் உரையை நிறைவு செய்தார்.

நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும், சுகாதார வசதிகளை விரிவுபடுத்தி மேம்படுத்தும் பிரதமரின் தொலைநோக்குப் பார்வை அடிப்படையில், சிஎன்சிஐ இரண்டாவது வளாகம் கட்டப்பட்டுள்ளது. சிஎன்சிஐ அதிக எண்ணிக்கையிலான புற்று நோயாளிகளைக் கொண்டிருந்ததால் இதன் விரிவாக்கம் தேவை என்பது சில நேரங்களில் உணரப்பட்டது. இரண்டாவது வளாகம் மூலம் இந்தத் தேவை பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.

சிஎன்சிஐ 2-வது வளாகம் ரூ.540 கோடி செலவில் கட்டப்பட்டது. இதில், 75:25 என்ற விகிதத்தில் ரூ.400 கோடி மத்திய அரசாலும் எஞ்சியத் தொகை மேற்கு வங்க அரசாலும் வழங்கப்பட்டது. புற்றுநோய் கண்டறிதல், நோய் பரவும் நிலை, சிகிச்சை, கவனிப்பு ஆகியவற்றுக்கான அனைத்து உள்கட்டமைப்புகளுடன் 460 படுக்கை வசதி கொண்ட விரிவான புற்றுநோய் மையமான இந்த வளாகம் அமைந்துள்ளது. அணு மருத்துவம் (பிஇடி), 3.0 டெஸ்லா எம்ஆர்ஐ, 128 ஸ்லைஸ் சிடி ஸ்கேனர், அணுக்கதிரியக்க சிகிச்சைப் பிரிவு போன்ற நவீன வசதிகளை இந்த வளாகம் கொண்டுள்ளது. புற்று நோய்க்கான நவீன ஆராய்ச்சி வசதிகளுடன் செயல்படவிருக்கும் இந்த வளாகம் புற்று நோயாளிகளுக்கு, குறிப்பாக  நாட்டின் கிழக்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கு  ஒருங்கிணைந்த சிகிச்சையை வழங்கும்.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply