பஞ்சாப் பயணத்தின் போது பிரதமர் நரேந்திர மோதிக்கு ஏற்பட்ட பாதுகாப்புக் குறைபாடு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று “லாயர்ஸ் வாய்ஸ்” என்ற தனியார் தொண்டு நிறுவனத்தின் மூலம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் சூா்யகாந்த், ஹிமா கோலி ஆகியோரைக் கொண்ட அமர்வு, ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி இந்து மல்கோத்ரா தலைமையில் 4 பேர் கொண்ட குழுவை அமைத்து இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த விசாரணை குழுவில் பஞ்சாப் உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர், பஞ்சாப் டிஜிபி, சண்டிகர் டிஜிபி மற்றும் தேசிய புலனாய்வு அமைப்பின் இயக்குநர் ஜெனரல் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
முழு விசாரணை அறிக்கையும் பிரமாண பத்திரமாக இந்த குழு உச்சநீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும். அதுவரை மத்திய, மாநில அரசுகள் முன்னதாக நியமித்த குழுக்கள் தங்களது விசாரணையை மேற்கொள்ள கூடாது. இதற்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. இவ்விசயத்தை உச்சநீதிமன்றம் தீவிரமாக கண்காணிக்கும். அதுவரை இந்த வழக்கு நிலுவையில் இருக்கும்.
இவ்வாறு அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்ற அமர்வு பிறப்பித்த உத்தரவின் உண்மை நகல், நமது வாசகர்களின் பார்வைக்காக இங்கு பதிவு செய்துள்ளோம்.
–Dr.துரை பெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : editorutlmedia@gmail.com
இதுதொடர்பான முந்தைய செய்திக்கு கீழ்காணும் இணைப்பை ”கிளிக்” செய்யவும்.