வங்காள விரிகுடாவில் இந்திய-ஜப்பான் கடற்படை கூட்டுப் பயிற்சி மேற்கொண்டுள்ளன.
இந்தியா-ஜப்பான் ஆகிய இரு நாடுகளின் கடற்படைகள் இணைந்து கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. போர் காலங்களில் எதிரிநாட்டு படைகளை சமாளிப்பது, விமானத்தில் பறப்பது உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்திய போர்க்கப்பலான சிவாலிக் & காட்மண்டு, ஜப்பானிய போர்க் கப்பலான உராகா மற்றும் ஹிராடோ ஆகிய கப்பல்களுடன் இணைந்து வங்காள விரிகுடாவில் நேற்று இந்த பயிற்சியை மேற்கொண்டன. இதுகுறித்து இந்திய கப்பற்படை தனது சமூக வலைத்தள பக்கத்தில் கருத்துப் பதிவிட்டுள்ளது.
ஜப்பான்-இந்தியா ஆகிய இரு நாடுகளும் பல ஆண்டு காலமாக நட்பு நாடுகளாக இருந்து வருகின்றன. இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு பொருளாதார ஒப்பந்தங்களும் இடப்பட்டுள்ளன. இந்நிலையில் இரு நாடுகளிடையே பாதுகாப்பு, அமைதி ஆகியவற்றை பலப்படுத்தும் நோக்கில் இந்த கூட்டுப் பயிற்சி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
–எம்.பிரபாகரன்