சின்ன குழந்தைகளை வைத்து, பிரதமர் நரேந்திர மோதியை விமர்சனம் செய்த விவகாரம்!-ஜீ தொலைக்காட்சி நிர்வாகத்திற்கு, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் நோட்டீஸ்!

“ஜூனியர் சூப்பர் ஸ்டார்’ என்ற நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோதி மற்றும் அவரது ஆட்சி நிர்வாகம், அவரது அரசியல் நடவடிக்கை மற்றும் கொள்கை முடிவுகளை சின்ன குழந்தைகளை வைத்து கொஞ்சம்கூட ஒளிவு மறைவு இல்லாமல் நிகழ்ச்சி தயாரித்து ஒளிபரப்பிய ஜீ தமிழ் தொலைக்காட்சி நிர்வாகத்திற்கு, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்த நோட்டீஸ் கண்ட ஏழு நாட்களுக்குள் இதுகுறித்து உரிய விளக்கம் அளிக்க வேண்டும். இல்லையென்றால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சின்ன பிள்ளைகள் விட்ட வெள்ளாமை வீடு வந்து சேராது” என்ற பழமொழியும், “குட்டிகள் குறைத்து தாய் தலையில் விழுந்த கதையாக” என்ற பழமொழியும், ஜீ தமிழ் தொலைக்காட்சி நிர்வாகத்திற்கு இந்நிகழ்வு மூலம் பொருத்தமாக அமைந்துவிட்டது.

Dr.துரை பெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : editorutlmedia@gmail.com

Leave a Reply