மத்திய அரசுக்கு சொந்தமான வங்கி சாரா நிதி நிறுவனங்களான மின்விசை நிதிக்கழகம் மற்றும் கிராமப்புற மின்மயமாக்கல் கழகம் வழங்கும் அனைத்து வகையான கடன்களுக்கான வட்டி 40 அடிப்படை புள்ளிகள் வரை குறைக்கப்பட்டுள்ளது.
இந்த வட்டி குறைப்பு குறித்து மத்திய மின்துறை மற்றும் புதிய & புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறை அமைச்சர் திரு ஆர் கே சிங், மனநிறைவு தெரிவித்துள்ளார்.
இந்த இரு நிறுவனங்களின் வட்டி குறைப்பு நடவடிக்கை மின்சார வாரியங்கள் போட்டி அடிப்படையில் கடனுதவி பெறவும், மின்சார கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு முதலீடு செய்யவும் உதவுவதுடன், நுகர்வோரும் குறைந்த கட்டணத்தில் நம்பகமான முறையில், மின்சாரத்தைப் பெற்று பயனடையலாம் என்றும் ஆர் கே சிங் தெரிவித்துள்ளார்.
–எம்.பிரபாகரன்