தெற்கு தில்லியில் மின்சார வாகனங்களுக்கான முதல் மின்னேற்ற நிலையத்தை, தொலைதொடர்பு துறையின் கீழ் செயல்படும் டிசிஐஎல் நிறுவனம் தெற்கு தில்லி மாநகராட்சியுடன் இணைந்து நேற்று தொடங்கியது. இதை வெளியுறவுத்துறை இணையமச்சர் மீனாட்சி லெகி, டிசிஐஎல் நிறுவன தலைமை நிர்வாக இயக்குனர் சஞ்சீவ் குமார் முன்னிலையில் தொடங்கி வைத்தார்.
தெற்கு தில்லியில் அடுத்த 4 மாதங்களில் 65 மின்னேற்ற நிலையங்களை டிசிஐஎல் நிறுவனம் அமைக்கவுள்ளது. இதில் முதல் மின்னேற்ற நிலையம் இன்று தொடங்கப்பட்டுள்ளது. இதில் ஒரே நேரத்தில் 6 இருசக்கர/மூன்றுசக்கர/நான்குசக்கர வாகனங்களுக்கு மீள் மின்னேற்றம் செய்ய முடியும்.
இந்த சார்ஜிங் நிலையங்களில் சிசிடிவி கேமிராக்கள் உள்ளன. மக்கள் பயன்பாட்டுக்காக வைபை வசதியும் உள்ளது. இங்கு 6 கிலோவாட் சூரிய மின்சக்தி தகடுகள் மூலம் மின்வசதியும் செய்யப்பட்டுள்ளது.
இந்த மின்னேற்ற நிலையங்கள், மின்சார வாகனங்கள் பிரபலமடையவும், தில்லியில் காற்று மாசுவை குறைக்கவும் உதவும்.
–திவாஹர்