முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளும்; 58 இடங்களில் நடைப்பெற்றச் சோதனையில் கைப்பற்றிய பணம், நகை மற்றும் ஆவணங்களும்!-உள்ளது உள்ளபடி!

முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன்.

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வந்த புகாரின் அடிப்படையில், தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த தமிழ்நாடு அரசின் முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சரும், பாலக்கோடு தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினருமான கே.பி. அன்பழகனை முதல் குற்றவாளியாகவும், அவரது மனைவி மல்லிகா 2 ஆவது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டுள்ளனர். அவரது மகன்கள் சசிமோகன், சந்திர மோகன் ஆகியோர் 3 மற்றும் 4 வது குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். அன்பழகனின் மருமகள் வைஷ்ணவி மீதும் தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் வீடு உள்பட 58 இடங்களில் தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையினர் நேற்று (20.01.2022) சோதனை நடத்தினர். தருமபுரியில் -53 இடங்களிலும், சென்னையில்-3 இடங்களிலும், சேலம் மற்றும் தெலுங்கானா மாநிலத்தில் தலா ஒரு இடத்திலும் இந்த சோதனை நடைபெற்றது.

இந்நிலையில், பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கியதில் 500 கோடி ஊழல் என எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டிய நிலையில், அந்த 500 கோடி ஊழல் செய்ததை மறைக்கவே தனது வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை நடத்தியிருக்கின்றனர் எனவும்; இந்த சோதனையில் எதுவும் கைப்பற்றப்பட வில்லை என்றும் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறியுள்ளார்.

ஆனால், இந்த சோதனையின் போது ரூ.2,87,98,650/- ரொக்கமும், 6.637 கிலோ கிராம் தங்க நகைகளும், சுமார் 13.85 கிலோ கிராம் வெள்ளிப் பொருட்களும் மற்றும் ஆவணங்களும் கண்டுப்பிடித்துள்ளனர். இதில் கணக்கில் வராத பணம் ரூ.2,65,31,650/-, வங்கி பாதுகாப்பு பெட்டக சாவி மற்றும் இந்த வழக்கிற்கு தொடர்புடைய ஆவணங்களை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

இதோ அதற்கான ஆதாரம்:

முதல் தகவல் அறிக்கையின் உண்மை நகல்.

Dr.துரை பெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : editorutlmedia@gmail.com

Leave a Reply