பிரதமரின் தேசிய பால புரஸ்கார் விருது பெற்றவர்களுடன் பிரதமர் கலந்துரையாடினார்.

PM interacts with the Pradhan Mantri Rashtriya Bal Puraskar (PMRBP) awardees, through video conferencing, in New Delhi on January 24, 2022.

Prime Minister Shri Narendra Modi interacted with Pradhan Mantri Rashtriya Bal Puraskar (PMRBP) awardees today via video conference. Digital certificates were conferred on PMRBP awardees for the years 2022 and 2021 using Blockchain Technology. This technology was used for the first time for giving certificates to awardees. Union Women and Child Development Minister Smt Smriti Zubin Irani and Dr. Munjpara Mahendrabhai, Minister of State were among those present on the occasion.

Interacting with Master Avi Sharma of Indore, Madhya Pradesh the Prime Minister enquired about the secret of his prolific output with regard to various aspects of Ramayana. Master Avi Sharma said that he got the inspiration by the decision of broadcasting the serial Ramayana during the lockdown. Avi also recited some couplets from his creation. The Prime Minister narrated an incident when he went and heard Sushri Uma Bharti Ji when, as a child, she showed immense spiritual depth and knowledge in a programme. He said there is something in the soil of Madhya Pradesh that gives rise to such precocious talent. The Prime Minister told Avi that he is an inspiration and an example of the adage that you are never too young to do big things.

Interacting with Kumari Remona Evette Pereira from Karnataka, the Prime Minister discussed her passion for Indian Dance. He inquired about the difficulties she faced in pursuing her passion. The Prime Minister complimented her mother for ignoring her own adversities to realise her daughter’s dreams. The Prime Minister said that Remona’s achievements are much bigger than her age and told her that her art is a way of expressing the strength of the great country.

Interacting with Kumari Puhabi Chakraborti of Tripura, the Prime Minister enquired about her COVID related innovation. She also informed the Prime Minister about her fitness app for sportspersons. The Prime Minister asked about the support she receives from the school, friends and parents in her endeavour. He asked about her balance in devoting her time to sports as well as developing innovative apps.

Interacting with Master Dhiraj Kumar from West Champaran, Bihar, the Prime Minister asked about the incident where he saved his younger brother from a crocodile attack. PM asked about his state of mind while saving his younger brother and how he feels after the fame he got now. The Prime Minister praised his courage and presence of mind. Dhiraj told the Prime Minister that he wants to serve the country as an Army soldier.

Interacting with Master Meedhansh Kumar Gupta from Punjab, the Prime Minister enquired about his achievement of creating an app for COVID issues. The Prime Minister said that in children like Meedhansh he feels that the government efforts to promote entrepreneurship are bearing fruit and a tendency to become job providers instead of being job seekers is becoming more pronounced.

Interacting with Kumari Tarushi Gaur from Chandigarh, the Prime Minister enquired about her opinion on the balance between sports and studies. The Prime Minister asked why Tarushi idolises Boxer Mary Kom. She informed the Prime Minister that she likes her because of her commitment to excellence and balance that she strikes as a sportsperson and as a mother.  The Prime Minister said that the government is committed to providing all the facilities to the sportspersons and creating a mindset of winning at every level.

Addressing the gathering, the Prime Minister noted that these awards become all the more significant in the light of the fact that they have been conferred during the important period when the country is celebrating Azadi Ka Amrit Mahotsav. He said this is the time to draw energy from the past and dedicate oneself to achieving great results in the coming 25 years of the Amrit kaal.  He also greeted the daughters of the country on National Girl Child Day.  The Prime Minister remembered the glorious history of the Freedom Struggle and the contribution of Birbala Kanaklata Barua, Khudiram Bose and Rani Gaidinilu. “These fighters had made the country’s freedom the mission of their lives at a very young age and had dedicated themselves for it” the Prime Minister noted.

The Prime Minister also recalled his visit to the Nowshera sector of Jammu and Kashmir on Diwali last year where he met Baldev Singh and Basant Singh who had played the role of child soldiers in the post-independence war. They Helped his army at such a young age without caring about their life. The Prime Minister paid tribute to the bravery of these heroes.

The Prime Minister cited examples of the bravery and sacrifice of the sons of Guru Gobind Singh Ji. He pointed out that when the Sahibzadas had sacrificed with immense valour, they were very young. Their sacrifice for India’s civilization, culture, faith and religion is incomparable. The Prime Minister asked the youngsters to know more about the Sahibzadas and their sacrifice.

The Prime Minister remarked that a digital statue of Netaji Subhas Chandra Bose has also been installed near India Gate in Delhi. “We get the biggest inspiration from Netaji –  duty of the nation first.  Taking inspiration from Netaji, you have to proceed on the path of duty for the country”, Shri Modi added.

The Prime Minister said that in any sector, policies and initiatives are keeping youth at the centre. He cited initiatives like Start Up India, Stand Up India, Digital India, Make in India along with Jan Andolan of Aatmnirbhar India and creation of modern infrastructure. This, he said, is in sync with the speed of the youth of India who are leading this new epoch both in India and outside. The Prime Minister underlined the growing prowess of India in the innovation and start-up sphere. He conveyed the nation’s pride in the fact of major global companies being led by Indian young CEOs. “Today we feel proud when we see the youth of India excelling in the world of startups. Today we feel proud when we see that the youth of India are innovating, taking the country forward”, the Prime Minister said.

The Prime Minister said in areas where daughters were not even allowed earlier, daughters are doing wonders in them today. This is the new India, which does not hold back from innovating, courage and determination are the hallmarks of India today.

The Prime Minister lauded that the children of India have shown their modern and scientific thinking in the vaccination program as well. Since January 3, in just 20 days, more than 40 million children have got the corona vaccine. He also lauded them for their leadership in the Swachch Bharat Abhiyan. The Prime Minister appealed to them to be an ambassador for Vocal for Local and lead the campaign of Aatmnirbhar Bharat.

XXXXXXXXXXXXXX

பிரதமரின் தேசிய பால புரஸ்கார் விருது பெற்றவர்களுடன் பிரதமர் நரேந்திர மோதி இன்று காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார். பிளாக்செயின் எனப்படும் இணைய வழி ஆவண பரிமாற்றத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 2021, 2022 ஆம் ஆண்டுகளின்  விருதாளர்களுக்கு டிஜிட்டல் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி விருதாளர்களுக்கு முதன்முறையாக சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சியில் மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி சுபின் இரானி, இணையமைச்சர் டாக்டர் முஞ்பரா மகேந்திரபாய் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மத்தியப்பிரதேசத்தின் இந்தூரைச் சேர்ந்த சிறுவன் அவி சர்மாவுடன் கலந்துரையாடிய பிரதமர், ராமாயணத்தின் பல்வேறு அம்சங்களை சிறந்த முறையில் வெளிப்படுத்தியிருப்பதன் ரகசியம் பற்றி கேட்டார். முழு ஊரடங்கின்போது ராமாயணம் தொடரை ஒளிபரப்புவது என்ற முடிவால் தாம் ஊக்கம் பெற்றதாக அவி சர்மா கூறினார். அவரது படைப்பில் சில பாடல் வரிகளையும் பாடினார். செல்வி உமாபாரதி குழந்தையாக இருந்தபோது ஒரு நிகழ்ச்சியில் அவரது ஆழமான ஆன்மீகத்தையும், அறிவுத்திறனையும் வெளிப்படுத்தியதைப் பிரதமர் அப்போது எடுத்துரைத்தார். மத்தியப்பிரதேச மண்ணில் வயதுக்கு மீறிய திறனை அளிப்பதற்கான ஏதோ ஒன்று இருக்கிறது என்று அவர் கூறினார். மிகச் சிறியவர்களும், பெரிய செயல்களை செய்யலாம் என்பதற்கு அவர் ஓர் உதாரணமாகவும், உந்து சக்தியாகவும் இருப்பதாக அவியிடம் பிரதமர் கூறினார்.

கர்நாடகாவைச் சேர்ந்த செல்வி ரிமோனா எவடே பெரிராவுடன் உரையாடிய பிரதமர், இந்திய நடனத்தில் அவரது ஆர்வம் குறித்து விவாதித்தார். இந்த ஆர்வத்தைத் தொடரும்போது எதிர்கொண்ட பிரச்சனைகள் பற்றியும் அவர் கேட்டறிந்தார். தமது மகளின் கனவுகள் நிறைவேற சொந்த நலன்களை மறந்த அவரது தாயாரை பிரதமர் பாராட்டினார். ரிமோனாவின் சாதனைகள் அவரது வயதை விட மிகவும் பெரியவை என்று கூறிய பிரதமர், இந்த மகத்தான தேசத்தின் பலத்தை வெளிப்படுத்தும் ஒரு வழியாக இந்தக் கலை உள்ளது என்று அவரிடம் தெரிவித்தார்.

திரிபுராவை சேர்ந்த செல்வி புகாபி சக்கரவர்த்தியுடன் உரையாடிய பிரதமர், கொவிட் தொடர்பான அவரின் புதிய கண்டுபிடிப்பு பற்றி விசாரித்தார். விளையாட்டு வீரர்களுக்கான தமது உடல் தகுதி செயலி பற்றி பிரதமரிடம் அவர் எடுத்துரைத்தார். இந்த முயற்சியில் பள்ளி, நண்பர்கள், பெற்றோர்களிடமிருந்து அவர் பெற்ற ஆதரவு பற்றி பிரதமர் வினவினார். விளையாட்டுக்களுக்கும் அதே சமயம் புதிய செயலி உருவாக்கத்திற்கும் அவரது நேரத்தை சமமாக பகிர்ந்தது பற்றியும் பிரதமர் கேட்டறிந்தார்.

பீகார் மாநிலத்தின் மேற்கு சம்ப்ரானைச் சேர்ந்த சிறுவன் திராஜ் குமாருடன் உரையாடிய பிரதமர், முதலைத் தாக்குதலிலிருந்து இளைய சகோதரரைக் காப்பாற்றிய சம்பவம் பற்றி அவரிடம் கேட்டறிந்தார். இளைய சகோதரரைக் காப்பாற்றிய போதும் இப்போது புகழ் பெற்றுள்ள போதும் அவரது மனநிலை எப்படி இருக்கிறது என்பது பற்றியும் பிரதமர் கேட்டார். அந்த சிறுவனின் துணிச்சலையும், சமயோசித அறிவையும் பிரதமர் பாராட்டினார். ஒரு ராணுவ வீரராக நாட்டிற்கு சேவை செய்ய தாம் விரும்புவதாக பிரதமரிடம் திராஜ் கூறினார்.

பஞ்சாபை சேர்ந்த சிறுவன் மீதான்ஷ் குமார் குப்தாவுடன் உரையாடிய பிரதமர், கொவிட் பிரச்சனைகளுக்கான செயலியை உருவாக்கி சாதனைப் படைத்தது பற்றி பிரதமர் விசாரித்தார். தொழில் முனைவோரை உருவாக்குவதற்கான அரசியல் முயற்சிகள் பயன் தந்துள்ளதையும் வேலை தேடுவோர் என்பதற்கு மாறாக வேலை தருவோராக மாறியிருப்பதையும் மீதான்ஷ்  போன்ற இளையோர்களிடம் காண்பதாக பிரதமர் கூறினார்.

சண்டிகரைச் சேர்ந்த செல்வி தாருஷி கவுருடன் உரையாடிய பிரதமர், விளையாட்டுக்கும், படிப்புக்கும் இடையே சமச்சீராக இருப்பது பற்றி கருத்து கேட்டார். குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோமை முன்மாதிரியாக தாருஷி எடுத்துக் கொண்டது ஏன்? என்று பிரதமர் வினவினார். அவரது சிறப்பான செயல்பாடும் விளையாட்டு வீராங்கனையாகவும், ஒரு தாயாகவும் சமநிலையில் இருந்தது ஆகியவையே அவர் மீதான ஈர்ப்புக்கு காரணம் என்று பிரதமரிடம் தாருஷி கூறினார். விளையாட்டு வீரர்களுக்கு அனைத்து வசதிகள் கிடைப்பதற்கும் எந்த நிலையிலும் வெல்வதற்கான மனநிலையை உருவாக்குவதற்கும் அரசு உறுதிபூண்டிருப்பதாக பிரதமர் கூறினார்.

கூடியிருந்தோரிடையே உரையாற்றிய பிரதமர், சுதந்திரத்தின் 75-வது ஆண்டுப் பெருவிழா கொண்டாடும் முக்கியமான தருணத்தில் இவர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்படுவது மிகவும் சிறப்பு வாய்ந்தது என்றார். கடந்த காலத்திலிருந்து வலிமையைப் பெற்று அமிர்த காலமான வரும் 25 ஆண்டுகளில் மகத்தான விளைவுகளை உருவாக்க அர்ப்பணிப்பதற்கான தருணம் இது என்று அவர் கூறினார். தேசிய பெண் குழந்தைகள் தினத்தன்று நாட்டின் புதல்விகளையும் அவர் பாராட்டினார். விடுதலைப் போராட்டத்தின் புகழ் மிக்க வரலாற்றையும் பீர்பால கனக்லதா பருவா, குதிராம் போஸ், ராணி கைடிநீலு ஆகியோரின் பங்களிப்பையும் பிரதமர் நினைவு கூர்ந்தார். “இளம் வயதிலேயே இந்த வீரர்கள் நாட்டின் சுதந்திரத்திற்கான இயக்கத்தில் ஈடுபட்டு அதற்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்டார்கள்” என்று பிரதமர் குறிப்பிட்டார்.

கடந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகையின்போது ஜம்மு-காஷ்மீரின் நவ்ஷேரா பகுதிக்குப் பயணம் செய்ததையும் சுதந்திரத்திற்குப் பிந்தைய போரின் போது சிறார் வீரர்களாக பங்களிப்பு செய்த பல்தேவ் சிங், பசந்த் சிங் ஆகியோரை சந்தித்ததையும் பிரதமர்  நினைவு கூர்ந்தார். தங்களின் வாழ்க்கையைப் பற்றி கவலைப்படாமல் அந்த இளம் வயது ராணுவத்திற்கு அவர்கள் உதவி செய்தனர். இந்த நாயகர்களின் வீரத்திற்குப் பிரதமர் புகழாரம் சூட்டினார்.

குரு கோவிந்த் சிங் அவர்களின் புதல்வர்கள் கொண்டிருந்த வீரத்தையும், செய்த தியாகத்தையும் உதாரணங்களாக பிரதமர் சுட்டிக்காட்டினார். மிகுந்த துணிச்சலுடன் இந்தப் புதல்வர்கள் தியாகம் செய்தபோது அவர்களின் வயது மிகவும் இளையது என்று அவர் குறிப்பிட்டார். இந்தியாவின் நாகரீகம், கலாச்சாரம், ஆன்மீகம், சமயத்திற்கு அவர்களின் தியாகம் ஒப்பில்லாதது. இந்தப் புதல்வர்கள் மற்றும் அவர்களின் தியாகம் குறித்து கூடுதலாக அறிந்து கொள்ளுமாறு இளைஞர்களை பிரதமர் கேட்டுக் கொண்டார்.

தில்லியில் இந்தியாவின் நுழைவாயில் அருகே நேதாஜி சுபாஷ் சந்திர போசின் டிஜிட்டல் வடிவிலான உருவச்சிலை அமைக்கப்பட்டிருப்பதைப் பிரதமர் எடுத்துரைத்தார். “தேசத்திற்கான கடமை என்பதில் நேதாஜியிடமிருந்து மிகப் பெரும் ஊக்கத்தை நாம் பெற்றிருக்கிறோம். நேதாஜியிடமிருந்து இந்த ஊக்கத்தை எடுத்துக் கொண்டு நாட்டின் கடமைப் பாதையில் நீங்கள் தொடர்ந்து பயணம் செய்ய வேண்டும்” என்று திரு.மோடி கூறினார்.

எந்தத் துறையும், கொள்கைகளும், முன்முயற்சிகளும் இளைஞர்களை மையப்படுத்தி உள்ளன என்று பிரதமர் கூறினார். தொடங்குக இந்தியா, நிமிர்ந்து நில் இந்தியா, டிஜிட்டல் இந்தியா, இந்தியாவில் உற்பத்தி ஆகியவற்றுடன் தற்சார்பு இந்தியாவின் மக்கள் இயக்கம் நவீன கட்டமைப்புகள் உருவாக்கம் போன்ற முன்முயற்சிகளை அவர் எடுத்துரைத்தார். இந்தியாவிலும், வெளிநாட்டிலும் புதிய சகாப்தத்தில் தலைமை தாங்குவதற்கு இந்திய இளைஞர்களின் வேகம் பொருத்தமாக உள்ளது. புதிய கண்டுபிடிப்பு மற்றும் புதிய தொழில்கள் துறையில் இந்தியாவின் சக்தி அதிகரித்து வருவதை பிரதமர் கோடிட்டுக் காட்டினார். உலகின் மிகப் பெரிய நிறுவனங்களுக்கு இந்தியாவின் இளம் தலைமை நிர்வாகிகள் பொறுப்பேற்றிருக்கும் நாட்டின் பெருமிதத்தை அவர் எடுத்துரைத்தார். “இன்று புதிய தொழில்கள் உலகத்தில் இந்தியாவின் இளைஞர்கள் சிறந்து விளங்குவதைக் காணும் போது நாம் பெருமிதம் கொள்கிறோம். இந்தியாவின் இளைஞர்கள் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கி நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வதால் நாம் பெருமிதம் கொள்கிறோம் என்று பிரதமர் கூறினார்.

நாட்டின் புதல்விகள் முற்காலத்தில் அனுமதிக்கப்படாத துறைகளிலும் கூட இன்று சிறப்பாக பணியாற்றுகிறார்கள் என்று பிரதமர் கூறினார். புதிய கண்டுபிடிப்பிலிருந்து பின்வாங்காத புதிய இந்தியா இது. துணிவும், உறுதியும் இன்றைய இந்தியாவின் அடையாளங்களாகும்.

தடுப்பூசித் திட்டத்தில் இந்திய இளையோர்கள் தங்களின் நவீன, அறிவியல் ஆர்வத்தைக் காண்பித்திருப்பதற்கு பிரதமர் பாராட்டுத் தெரிவித்தார். ஜனவரி 3-லிருந்து வெறும் 20 நாட்களில் 40 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். தூய்மை இந்தியா திட்டத்தில் இவர்களின் தலைமைத்துவத்திற்காகவும் அவர் பாராட்டினார். உள்ளூர் பொருட்களை ஆதரிக்கும் தூதர்களாக இருக்குமாறும், தற்சார்பு இந்தியா இயக்கத்திற்கு தலைமை தாங்குமாறும் அவர்களுக்குப் பிரதமர் அழைப்பு விடுத்தார்.

எம்.பிரபாகரன்

Leave a Reply