என்டிபிசி-யின் சிஎஸ்ஆர் திட்டத்தின் கீழ் பாட்னாவில் உள்ள ஐஜிஐஎம்எஸ்-க்கு 4 ஏஎல்எஸ் ஆம்புலன்ஸ்களை மின்துறை அமைச்சர் கொடியசைத்து அனுப்பி வைத்தார்.

தேசிய அனல் மின் கழகத்தின் (என்டிபிசி) பெரு நிறுவன சமூகப் பொறுப்புத் திட்டத்தின் கீழ் பாட்னாவில் உள்ள மருத்துவ விஞ்ஞானத்திற்கான இந்திரா காந்தி கல்விக்கழகத்திற்கு (ஐஜிஐஎம்எஸ்) நவீன உயிர்க்காப்பு வசதிகள் கொண்ட (ஏஎல்எஸ்) 4 ஆம்புலன்ஸ்களை மத்திய மின்சாரம், புதிய மற்றும் புதுப்பிக்கவல்ல எரிசக்தித் துறை அமைச்சர் ஆர்.கே.சிங் கொடியசைத்து அனுப்பி வைத்தார்.

ஐஜிஐஎம்எஸ் நிர்வாக அலுவலக வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில், காணொலி காட்சி மூலம் புதுதில்லியிலிருந்து பங்கேற்ற மத்திய அமைச்சர் திரு.ஆர்.கே.சிங், ஐஜிஐஎம்எஸ் மருத்துவ மேற்பார்வையாளர் டாக்டர் மனீஷ் மண்டலிடம் ஆம்புலன்ஸ் சாவிகளை ஒப்படைத்தார். பீகார் எரிசக்தித் துறை அமைச்சர் திரு.பிஜேந்திர பிரசாத் யாதவ், சுகாதாரத்துறை அமைச்சர் திரு.மங்கல் பாண்டே ஆகியோர் நிகழ்ச்சியில் நேரடியாக கலந்து கொண்டனர்.

பெரு நிறுவனம் சமூக பொறுப்புத் திட்டத்தின் கீழ் பீகார் மாநிலத்திற்கு என்டிபிசி கடந்த 4 ஆண்டுகளில் 3,200 கோடிக்கும் அதிகமாக செலவு செய்துள்ளது என்று அமைச்சர் ஆர்.கே.சிங் கூறினார். ஐஜிஐஎம்எஸ்-க்கு ஏற்கனவே 10 ஆம்புலன்ஸ்கள் வழங்கப்பட்டிருப்பதாகவும் பீகார் அரசின் வேண்டுகோளை அடுத்து மேலும் இரண்டு ஆம்புலன்ஸ்கள் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

எம்.பிரபாகரன்

Leave a Reply