நீர் மூழ்குதல் ஆதரவு கப்பல் திட்டத்தின் முதல் கப்பலைக் கட்டும் பணி கொல்கத்தாவில் தொடக்கம்!

நீர் மூழ்குதல் ஆதரவு கப்பல் (டிஎஸ்சி) திட்டத்தின் முதல் கப்பலின் கட்டுமானப் பணி 27 ஜனவரி 2022 அன்று கொல்கத்தாவில் உள்ள டிட்டாகர் வேகன்ஸ் லிமிடெட் நிறுவனததில்  தொடங்கியது. இந்தியக்  கடற்படையின் பிரதிநிதிகள் காணொலி மூலம் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இந்தியக்  கடற்படைக்கு ஐந்து டிஎஸ்சிக்களை (யார்டுகள் 325 முதல் 329 வரை) கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தம் டிட்டாகர் வேகன்ஸ் லிமிடெட் நிறுவனத்துடன் பிப்ரவரி 21-ல் கையெழுத்தானது.

துறைமுகத்திற்கு உள்ளேயும் அருகாமையிலும் உள்ள கப்பல்களுக்கு டைவிங் உதவி, நீருக்கடியில் பழுதுபார்த்தல், பராமரிப்பு மற்றும் பாதுகாப்புப் பணிகளுக்காக இந்தக் கப்பல்கள் இந்திய கடற்படையில் பணியமர்த்தப்படும். நவீன நீர்மூழ்கிக் கருவிகள் கப்பல்களில்  பொருத்தப்படும்.

அனைத்து முக்கிய மற்றும் துணை உபகரணங்கள் உள்நாட்டு உற்பத்தியாளர்களிடமிருந்து பெறப்பட்டு, பாதுகாப்பு அமைச்சகத்தின் மேக் இன் இந்தியா முன்முயற்சிகளுக்கு இந்த கப்பல்கள் பெருமை சேர்க்கின்றன

எம்.பிரபாகரன்

Leave a Reply