உணவுப் பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சகத்தின் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் தொலைநோக்கு ஆவணத்தை கர்மயோகி இயக்கத்தின் கீழ் மத்திய உணவுப் பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சர் பசுபதி குமார் பரஸ் இன்று வெளியிட்டார்.
இந்நிகழ்வின் போது தஞ்சாவூர் மற்றும் சோன்பட்டில் உள்ள தேசிய உணவு தொழில்நுட்ப தொழில்முனைதல் மற்றும் நிர்வாக நிறுவனங்களால் (நிஃப்டெம்) உருவாக்கப்பட்ட திறன் மேம்பாட்டுக்கான பல்வேறு பயிற்சி தொகுப்புகளும் வெளியிடப்பட்டன.
உணவுப் பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சகத்தின் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் தொலைநோக்கு ஆவணம் திறன் மேம்பாட்டு ஆணையத்தின் ஆதரவுடன் உருவாக்கப்பட்டுள்ளது. கர்மயோகி இயக்கத்தின் கீழ் திறன் மேம்பாட்டுத் திட்டத்தை உருவாக்கி செயல்படுத்துவதில் உணவு பதப்படுத்தும் தொழில்துகள் அமைச்சகம் முன்னிலை வகிக்கிறது.
உணவுப் பதப்படுத்தும் துறை தொடர்பான களப் பகுதிகளில் பயிற்சி அளிப்பதன் மூலம் மிகவும் ஆக்கப்பூர்வமான, செயலூக்கமுள்ள, பணி நேர்த்தி மிக்க, தொழில்நுட்பம் சார்ந்த, திறமையான, பொறுப்புணர்வுடன் கூடிய மற்றும் குடிமக்களை மையமாகக் கொண்ட வையில் செயல்படும் வகையில் பணியாளர்களை மேம்படுத்துவது அமைச்சகத்தின் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் நோக்கமாகும். ஏறக்குறைய 150 ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.
–எஸ்.சதிஸ் சர்மா