22-ம் நிதியாண்டின் 3-வது காலாண்டுக்கான தணிக்கை செய்யப்படாத நிதி முடிவுகளை என்டிபிசி வெளியிட்டது.

67,757.42 மெகாவாட் நிறுவு திறன் கொண்ட, நாட்டின் மிகப்பெரிய மின் உற்பத்தி நிறுவனமான என்டிபிசி, 22-ம் நிதியாண்டின் 3-வது காலாண்டுக்கான தணிக்கை செய்யப்படாத நிதி முடிவுகளை இன்று வெளியிட்டுள்ளது.

22-ம் நிதியாண்டின் 3-வது காலாண்டில், மொத்தம் 87.92 பில்லியன் யூனிட் மின்சாரத்தை உற்பத்தி செய்துள்ளதாக பதிவாகியுள்ளது. கடந்த 9 மாதத்தில் 264.70 பில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் இதே காலத்தில் முறையே, மின் உற்பத்தி 76.53 பில்லியன் யூனிட் மற்றும் 222.41 பில்லியன் யூனிட் உற்பத்தி ஆகி இருந்தது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் முறையே 14.88% மற்றும் 19.01% அதிகமாகும்.

தனித்த அடிப்படையில், மொத்த வருமானம் 22-ம் நிதியாண்டின் 3-வது காலாண்டில் 29,837.13 கோடியாகவும், நிதியாண்டின் 9 மாதத்தில் 85,912.38  கோடியாகவும் உள்ளது. இது முந்தைய ஆண்டில் இதே காலகட்டத்தில் முறையே, 25,268.56 கோடி, 75,312.89 கோடி என்ற அளவில் இருந்தது.

ஒட்டுமொத்த அளவில், 3-வது காலாண்டில் மொத்த வருமானம் 33,783.62 கோடியாகவும், 9 மாதத்தில் 97,269.89 கோடியாகவும் இருந்தது.இது முந்தைய ஆண்டில் முறையே, 28,387.27 கோடி மற்றும் 83,859.59 கோடி என்ற அளவில் இருந்தது.

நிறுவனத்தின் போர்டு இயக்குநர்கள் 22-ம் நிதியாண்டுக்கான இடைக்கால ஈவுத்தொகையாக பங்கு மூலதனத்தில் 40% அதாவது, ரூ.10 முகமதிப்பு கொண்ட பங்கு ஒன்றுக்கு ரூ.4 வீதம் வழங்க ஒப்புதல் அளித்துள்ளனர்.

எம்.பிரபாகரன்

Leave a Reply